டொனால் ரம் மேசையில் தாக்குதல் திட்டம்: அடுத்த சில மணி நேரத்தில் எதுவேண்டும் என்றாலும் நடக்கலாம்

அமெரிக்காவில் கூடியுள்ள தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் குழு. வட கொரியா மீது தாக்குதல் நடத்த என்ன செய்யவேண்டும் என்ற திட்ட வரைபை வரைந்து, அதிபர் டொனால் ரம் மேசையில் போட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வட கொரியாவை தாக்குவதே நல்லது என்றும். யார் முதலில் தாக்குகிறார்களோ அவர்களே வெற்றியடைவார்கள் என்றும் கூறப்படுகிறது. வட கொரியாவை அமெரிக்கா தாக்கினால், அன் நாட்டுக்கு துணையாக சீனா, அல்லது ரஷ்யா செல்லாது என்பது தற்போது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதனை அடுத்து அமெரிக்கா வட கொரியா மீது திடீர் தாக்குதல் ஒன்றை நடத்தக் கூடும் என்று எதிர்பார்கப்படுகிறது. முழு அளவிலான தாக்குதல் இல்லாமல், வட கொரியாவின் ஏவுகணை தளங்கள். மற்றும் முக்கிய ராணுவ தளங்களை தாக்கி அன் நாட்டு பாதுகாப்பு பலத்தை உடைப்பதே அமெரிக்காவின் நோக்கமாக உள்ளது. வட கொரியாவின் கப்பல் படை, விமானப் படை மேல் தாக்குதல் நடத்தி அதனையும் செயலிழக்கச் செய்ய அமெரிக்கா திட்டம் ஒன்றை தீட்டி வருகிறது.

எனவே என் நேரமானாலும் தாக்குதல் ஆரம்பிக்கப்படலாம் என்ற கருத்து பரவலாக உள்ளது.

-athirvu.com