பாரிஸ் நகரில் பயங்கரவாத தாக்குதல் : பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பலி

paris_tourist_001பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு தாக்குதலில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கொல்லப்பட்டுள்ள சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த தாக்குதல் சம்பவம் சாம்ப்ஸ் எலிஸில் பகுதியிலே இடம்பெற்றுள்ளது.

துப்பாக்கி ஏந்திய மர்ம நபர் பொலிஸாரை நோக்கி சரமாரியாக சுட்டதில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் சம்பவயிடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தின் போது மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இத்தாக்குதலில் ஈடுபட்ட நபரை பொலிஸார் சுட்டுக் கொன்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதேவேளை, சாம்ப்ஸ் எலிஸில் பகுதியை பொலிஸார் தங்களது காட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர்.

ஞாயிற்றுக் கிழமை ஜனாதிபதி தேர்தல் முதல் சுற்று நடைபெறவுள்ள நிலையில் பாரிஸில் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமையானது நாட்டு மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

பாரிஸ் புலனாய்வு துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரான்ஸ் நாட்டின் உள்துறை அமைச்சகம், இந்த தாக்குதலுக்குப் பின்னால் உள்ள காரணம் என்னவென்று தற்போதைக்குக் கூற முடியாது என்று தெரிவித்துள்ளது.

மேலும், பாரீஸின் முக்கிய பகுதிகளில் வெடி பொருள் எதாவது இருக்கின்றதா என்று தேடுதலும் நடந்து வருவதாக பிரான்ஸ் அரசு கூறியுள்ளது.

-tamilwin.com