அழிவை ஏற்படுத்தும் அமெரிக்காவின் ஆயுதம்? ரஸ்யாவிற்கு சவால்!

பேரழிவை ஏற்படுத்தும் வகையில் அணுவாயுதம் ஒன்றை தயாரிக்கும் முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

ரஷ்யாவின் அணுவாயுத பலத்தை முறியடிக்கும் வகையில் இது அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. Kinetic Energy Projectile (KEP) பெயரிடப்பட்டுள்ள இந்த ஆயுதம் பேரழிவை ஏற்படுத்தக் கூடியது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் நிலைகொண்டிருந்த ஐ.எஸ் ஐ.எஸ் தீவிரவாதிகள் மீது அனைத்து குண்டுகளுக்கும் தாய் குண்டாக (the mother of all bombs) பயன்படுத்தி அமெரிக்கா கடந்த வாரம் தாக்குதல் நடத்தியிருந்தது.

இந்த தாக்குதலில் 36 தீவிரவாதிகள் கொல்லப்பட்டிருந்தனர். தற்போது அதனை மிஞ்சும் வகையில் “பேரழிவை” ஏற்படுத்தும் ஆயுதம் ஒன்றை அமெரிக்கா தயாரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆயுதம் ஒலியை விட மூன்று மடங்கு வேகமாக செயற்படக்கூடியது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஒருமுறை ஏவினால் குறி தவறாது இலக்கை தாக்கி அழிக்க கூடியது என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த ஆயுதம் 2013ஆம் ஆண்டு முதன் முறையாக சோதனை செய்த போது விநாடிக்கு 3500 அடிவரை பயணித்தமை குறித்தும் பேரழிவை ஏற்படுத்துவது குறித்தும் Hix தகவல் வெளியிட்டிருந்தது.

இந்த சோதனை நடவடிக்கையானது மிகவும் வெற்றியளித்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், தனக்கு நேர் எதிரே வரும் எந்த இலக்கினையும் இந்த ஆயுதம் தாக்கில் அழிக்கவல்லது என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

-tamilwin.com