அமெரிக்கா மீது தாக்குதல் நடத்துவதற்கு ரஷ்யா மற்றும் வடகொரியா பாரிய மின்வெட்டை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியானதால், அமெரிக்க மக்கள் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர்.
அமெரிக்கா மற்றும் வடகொரியாவிற்கும் எந்த நேரத்திலும் போர் ஏற்படலாம் என்ற பரபரப்பு சூழ்நிலை உருவாகிவருகிறது. வடகொரியாவிற்கு ரஷ்யா ஆதரவு தெரிவித்து வருவதாக அவ்வப்போது செய்திகள் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில் அமெரிக்காவில் கடந்த வெள்ளிக்கிழமை மிகப்பெரிய மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. அதவாது முதலில் அமெரிக்காவின் San Francisco பகுதியில் இந்த மின்வெட்டு ஏற்பட்டுள்ளது.
இப்பகுதியில் 10,000-க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் ஏராளமான தொழிற்சாலைகள் உள்ள நிலையில், திடீரென்று இப்பகுதியில் எந்த ஒரு அறிவிப்புமின்றி மின்வெட்டு ஏற்பட்டது.
வெகு நேரம் ஆகியும் மின்சாரம் வரவில்லை, இதனால் மக்கள் பீதியில் உறைந்தனர்.
இதற்கு காரணம் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் முன்னாள் CIA-வின் இயக்குனர் James Woolsey வடகொரியா அமெரிக்கா மீது மின்காந்த சுத்திகரிப்பு தாக்குதலை நடத்துவதற்கு வாய்ப்பு உள்ளது என்று கூறினார்.
இந்த மின்வெட்டினால் சிலர் தங்களது டுவிட்டர் பக்கத்தில் வடகொரியா மற்றும் ரஷ்யா அமெரிக்கா மீது தாக்குதல் நடத்தவே இந்த மின்வெட்டு ஏற்பட்டுள்ளது என்று கூறிவந்தனர்.
அவ்வாறு கூறிவரும் நிலையில், நியூயார்க்கிலும் மின்வெட்டு ஏற்பட்டது. இதனால் அமெரிக்க மக்கள் பீதி அடைந்ததுடன் அச்சத்தில் இருந்தனர். இந்த செய்தி சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவியது.
அதன் பின் நான்கு மணி நேரங்களுக்கு பின்னர் மின் வெட்டு சரிசெய்யப்பட்டது. ஆனால் இந்த மின்வெட்டு எதனால் ஏற்பட்டது என்பது குறித்து இன்னும் சரிவர தெரியவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எந்த ஒரு அறிவிப்பும் இன்றி திடீரென்று நடந்த மின்வெட்டு, அதைத் தொடர்ந்து இந்த மின்வெட்டு எப்படி நடந்தது என்பதற்கான காரணம் தெரியாதது போன்றவை பலத்த சந்தேகத்தை ஏறபடுத்தியுள்ளது.
இது வடகொரியா மற்றும் ரஷ்யாவின் நடவடிக்கையாகத்தான் இருக்கும் என்று கூறப்படுகிறது.
-lankasri.com