உணவு வீணாவதை தடுக்க நூதன திட்டத்தினை அறிமுகப்படுத்திய லண்டன்

உலகம் முழுதும் ஒவ்வொரு பகுதியிலும் தினம் தினம் நூற்றுக்கணக்கான குழந்தைகள் பசியால் உணவின்றி மடிந்துவிடும் துயரம் நடைபெற்று கொண்டு தான் உள்ளது.

நாம் தினசரி வீணாக்கும் உணவானது மற்றொரு உயிருக்கு பசியினை தீர்க்கும் உணவாகும். விசேஷங்களின் போது ஏராளமான உணவானது வீணாக்கப்படுகிறது.

உலகில் உற்பத்தி செய்யப்படும் உணவில் மூன்றில் ஒரு சதவீத உணவானது வீணாக்கப்படுகிறது.

உலக அளவில் 11 சதவீத மக்கள் மோசமான ஊட்டச்சத்து குறைப்பாட்டினால் பாதிக்கப்பட்டு இருப்பதாக ஐ.நா. தகவல் ஒன்று தெரிவிக்கிறது.

உணவுகள் வீணடிக்கப்படுவதை தடுக்க லண்டனில் ஒரு புதிய திட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

லண்டன் மார்க்கெட்டில் வைக்கப்பட்டுள்ள ஃபிரிட்ஜ் ஒன்றில், வீணாகிவிடும் என்று நாம் நினைக்கும் உணவுகளை அதில் கொண்டு வந்து வைத்துவிடலாம்.

இந்த ஃபிரிட்ஜில் இருந்து யார் வேண்டுமானாலும் இலவசமாக உணவுகளை எடுத்து கொள்ளலாம். இதனை யாரும் தவறாக நினைப்பதில்லை.

லண்டனில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த திட்டத்திற்கு பொது மக்களிடையேயும் வர்த்தகர்களிடையேயும் பெரும் வரவேற்புள்ளது.

வணிகர்கள் வீணாகி போகும் பழங்கள் மற்றும் காய்கறிகளை இதில் கொண்டு வந்து வைத்துவிடுவதால் ஏழை மக்கள் இதனை எடுத்து உபயோகப்படுத்தி கொள்கின்றனர்.

ஆனால் கெட்டு போன பொருள்கள் மற்றும் இறைச்சி போன்றவை இதில் வைப்பதற்கு அனுமதிக்கப்படுவது இல்லை. இதன் மூலம் பொருள்கள் வீணாக்கப்படுவது குறைந்துள்ளதாகவும் அதிக பயன் கிடைப்பதாகவும் மக்கள் கூறியுள்ளனர்.

-lankasri.com