யாழில் பூரண ஹர்த்தால் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலும், சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் வடக்கு மற்றும் கிழக்கில் இன்று பூரண ஹர்த்தால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் யாழில் அரச நிறுவனங்கள் தவிர்ந்த ஏனைய கடை மற்றும் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், போக்குவரத்தும் முற்றாக ஸ்தம்பிதம் அடைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
-tamilwin.com