நிலைகுலைந்தது வடகொரியா? உறுதிப்படுத்திய அமெரிக்கா!

வடகொரியா மேற்கொண்ட மற்றுமொரு ஏவுகணைப் பரிசோதனை மீண்டும் தோல்வியில் முடிந்துள்ளதாக அமெரிக்கா பாதுகாப்பு தரப்பு வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையும், சர்வதேச நாடுகளும் வடகொரியாவின் ஏவுகணைப் பரிசோதனைக்கு கண்டனம் வெளியிட்டிருந்ததுடன், பல்வேறு எதிர்ப்புக்களும் தெரிவிக்கப்பட்டன.

அமெரிக்கா, ரஸ்யா, சீனா போன்ற மிக முக்கிய நாடுகள் வடகொரியாவின் செயற்பாட்டிற்கு கடுமையான எதிர்ப்பை வெளியிட்டன.

எனினும் தன்னுடைய பாதுகாப்பிற்கும், தன் நாட்டின் தற்காப்பிற்குமாகவே இவ்வாறான பரிசோதனைகளில் தாம் ஈடுபடுவதாக அந்நாடு தெரிவித்து வந்தது.

இதுவரை, இரண்டு அணுகுண்டு பரிசோதனைகளையும், 24 கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை பரிசோதனைகளையும் வடகொரியா மேற்கொண்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் வடகொரியா தன்னுடைய ஏவுகணைப் பரிசோதனை செய்தது. அது தோல்வியில் முடிவடைந்ததாக அமெரிக்கா தெரிவித்தது.

எனினும் தாங்கள் இந்த முயற்சியில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என்றும், அடுத்த சில நாட்களில் மீண்டும் ஏவுகணைப் பரிசோதனை நடவடிக்கையில் ஈடுபடுவோம் என்றும் வடகொரிய ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், வடகொரியாவின் இந்தச் செயற்பாடுகளால் அமெரிக்காவின் போர்க்கப்பல்கள் வடகொரிய தீபகற்பத்திற்கு விரைந்தன.

உலகப் போர் வெடிக்கும் என்றும், அழிவுகள் ஏற்படக் கூடும் என்றும் அச்சம் வெளியிட்டப்பட்ட சூழலில், தங்கள் மீது தாக்குதல் நடத்தினால் திருப்பி தாக்குவோம்.

இந்த நிலையில் இன்றைய தினம் வடகொரியா மீண்டும் ஏவுகணைச் சோதனையை மேற்கொண்டது. ஆனால், அது வழமையைப் போன்று சிறிது தூரம் சென்ற நிலையில் வெடித்துச் சிதறியதாக அமெரிக்கப் பாதுகாப்பு தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, இம்முறை வடகொரியா பரிசோதனைக்குப் பயன்படுத்திய ஏவுகணை எவ்வகையானது, அதன் எடை, அதன் தாக்கம் தொடர்பான எந்தத் தகவல்களையும் அது வெளியிடவில்லை.

 

ஆனால், அது நடுத்தர அளவிலான பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை தான் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அண்மைய நாட்களாக போர் பதற்றத்தில் இருந்து வந்த சூழலில், வடகொரியாவின் இந்த சோதனையின் தோல்வி அந்நாட்டிற்கு ஏற்பட்ட பாரிய பின்னடைவாகவே பார்க்கப்படுகின்றது. இந்த சோதனை நடவடிக்கையில் ஈடுபட்ட தரப்பினர் சற்று குழப்பமடைந்துள்ளதுடன், நிலைகுலைந்துள்ளனர் என்று அமெரிக்க தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இது குறித்து இதுவரை வடகொரிய அரசாங்கம் எந்தவிதமான உத்தியோகபூர்வ தகவல்கள் எதனையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

-tamilwin.com