தன்னுடைய முன்னர் வாழ்ந்த வாழ்க்கையை நினைத்து ஏங்குவதாக அமெரிக்காவின் 45-வது ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் 45-வது ஜனாதிபதியாக டொனால் டிரம்ப் தெரிவுசெய்யப்பட்டார். தெரிவு செய்யப்பட்ட டிரம்ப் 100 நாட்ள்கள் தனது பணியை நிறைவு செய்துள்ளார்.
இந்த நூறு நாட்களில் சிரியா மீது வான்வழி தாக்குதல், ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ் தீவிரவாதிகள் மீது தாக்குதல், வட கொரியாவுடன் கடும் மோதல் என ஒரு பரபரப்பாகவே உள்ளார்.
இதனிடையே தனது 100 நாட்ள்கள் பணி குறித்து அவர் பேசியிருக்கிறார். அதில் எனது முந்தைய வேலையைவிட அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருப்பது சற்று சவாலாக உள்ளது.
இது எளிமையான வேலை என நான் நினைத்து விட்டேன். இதற்கு முன்னர் வாழ்ந்து வந்த வாழ்க்கையை நினைத்து ஏங்குவதாக மனதில் பட்டதை வெளிப்படையாய் கூறியுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்னர் ட்ரம்ப் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.
-http://news.lankasri.com