வடகொரியா போர் விவகாரம்: அமெரிக்கா-சீனா முக்கிய ஆலோசனை!

உலக நாடுகளை அச்சுறுத்தும் விதத்தில் தொடர்ந்து அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருகிறது வடகொரியா.

இதன் காரணமாக, வடகொரியா மீது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலும், அமெரிக்காவும் கடந்த 2006-ம் ஆண்டில் இருந்து மிகக் கடுமையான பொருளாதார தடைகளை விதித்தன.

பொருளாதார தடை விதித்திருந்தாலும், வடகொரியா தன்னுடைய ஏவுகணை சோதனையை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. சமீபத்தில் நடந்த இரண்டு ஏவுகணை சோதனை வடகொரியாவுக்கு தோல்வியில் முடிந்தது.

இதற்கிடையில் தென்கொரியாவும், அமெரிக்காவும் இணைந்து தங்கள் நாட்டின்மீது போர் தொடுக்க ஆயத்தமாகி வருவதாகவும், அமெரிக்காவை அழித்துவிடுவோம் என்று எச்சரிக்கை விடுத்திருந்தது.

இதைத் தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வட கொரியாவின் இந்த மோதல் போக்கு பெரும் சேதத்தில் போய் முடியும் என்றும், பேச்சுவார்த்தை முயற்சிகள் வெற்றிபெறாவிட்டால், பெரிய மோதல் வெடிக்கும் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திர் டில்லர்சன் கூறுகையில், அணு ஆயுதங்களை கொரிய தீபகற்பத்தில் இருந்து அகற்றுவதற்காக வடகொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாகவும், தனது அண்டை நாடுகள் மீது வடகொரியாவின் அணு ஆயுத அச்சுறுத்தல் உண்மை என்று கூறிய அவர், தேவைப்பட்டால் வடகொரியாவுக்கு எதிராக இராணுவ நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலிக்க தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

இந்த கூட்டத்தில் சீனா வெளியுறவுத்துறை மந்திரி வாங் யி, டில்லர்சன்-ஐ சந்தித்தார். அப்போது கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுதங்களை அகற்றுவதில் உள்ள சவால்கள் மற்றும் அதனை எதிர்கொள்வதற்காக இரு நாடுகளும் ஒத்துழைப்பு வழங்குவது குறித்து விவாதித்தாக கூறப்படுகிறது.

-lankasri.com