வட கொரியாவுடன் உலக போர் ஆரம்பம்: சீனாவில் ஊதப்படும் அபாய சங்கு

வட கொரியாவுடன் மூன்றாம் உலக போர் ஆரம்பமாகலாம் என குறிக்கும் வகையில் சீனாவில் ஆபாய சங்கு ஊதப்பட்டுள்ளது.

வட கொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனைகளை நடத்தி உலக நாடுகளை பீதியில் ஆழ்த்தி வருகிறது.

இதற்கு அமெரிக்கா, சீனா உள்ளிட்ட பல நாடுகள் கண்டனம் தெரிவித்தாலும் வட கொரியா அதை கேட்க மறுக்கிறது.

இந்நிலையில், சீனாவில் உள்ள Shenyang நகரில் உலக போர் ஆரம்பமாகலாம் என அந்நாட்டு மக்களை எச்சரிக்கும் வகையில் அபாய சங்கு தொடர்ந்து ஊதப்பட்டு வருகிறது.

Shenyang நகரில் அபாய சங்கு ஊதுவது போன்ற வீடியோவும் தற்போது வெளியாகியுள்ளது.

வட கொரியாவின் எல்லை அருகில் தான் Shenyang நகரம் அமைந்துள்ளது. வட கொரியாவுக்கும், Shenyangக்கும் இடைவெளி வெறும் 80 மைல் தூரம் தான்.

அமெரிக்காவின் போர் கப்பல்களை அழிப்பது தொடர்பாக வட கொரியா கடந்த வாரம் வீடியோ வெளியிட்ட பின்னர், சீனா பயங்கரமான போர் கப்பலை அறிமுகப்படுத்தியது

மேலும், ஒன்பதாவது முறையாக வட கொரியா கடந்த வாரம் அணு ஆயுத சோதனையை மேற்கொண்டதிலிருந்து உலக போர் பதற்றம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

-http://news.lankasri.com