‘கீரி சுற்றுலா கடற்கரை’ வடமாகாண முதலமைச்சரினால் வைபவ ரீதியாக திறந்து வைப்பு

மன்னார் – கீரி கடற்கரை பகுதியில் சுற்றுலாத்துறையினை மேம்படுத்தும் வகையில் அமைக்கப்பட்ட ‘கீரி சுற்றுலா கடற்கரை’ வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனால் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வு மன்னார் நகர சபையின் செயலாளர் எக்ஸ்.எல்.றெனால்ட் தலைமையில் இன்று (2) காலை நடைபெற்றுள்ளது.

3.51 மில்லியன் ரூபாய் செலவில் குறித்த ‘கீரி சுற்றுலா கடற்கரை’ அமைக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன் ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.

இதன்போது, மன்னார் நகர சபையின் முன்னாள் உப தலைவர், உறுப்பினர்கள், வட மாகாண பிரதம செயலாளர் ஏ.பத்திநாதன், வடமாகாண முதலமைச்சரின் செயலாளர் வி.கேதீஸ்வரன், மன்னார் மாவட்ட பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் எம்.ஏ.ஜே.துரம் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

மேலும், வடமாகாண உள்ளூராட்சி உதவி ஆணையாளர் எம்.பற்றிக் டிறஞ்சன், மன்னார் நகர சபையின் அலுவலர்கள், மாதர், கிராம அபிவிருத்திச் சங்க பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

-tamilwin.com

TAGS: