மே 18 முள்ளிவாய்க்கால் தினம் நெருங்கும் வேளையில், இன்னும் அவிழ்க்கப்படாத பல மர்ம முடிச்சுகள் இருக்கிறது. கிழக்கில் கருணா விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து பிரிந்த வேளைகளில் அவரோடு நின்று செயல்பட்ட ஒரு நபர். தற்போது அப்புரூவராக மாறியுள்ளார். அவர் தனது சாட்சியங்களை பதிவு செய்து வரும் நிலையில், முள்ளிவாய்க்கால் பகுதியில் இறுதி நேரத்தில் சரணடைந்த கேணல் ரமேஷ் அவர்களை கொன்றுவிடுமாறு யார் கட்டளை பிறப்பித்தது ? என்பதனை நான் நன்கு அறிவேன் என்கிறார் அவர்.
இவர் உண்மையில் கேணல் ரமேஷ் தானா என அடையாளம் காட்ட என, கருணாவின் இந்த கையாளை ராணுவப் புலனாய்வுப் பிரிவினர் முள்ளிவாய்க்கால் அழைத்து வந்துள்ளார்கள். அவர் நேரடியாக அங்கே நிற்க்கும் வேளையில் தான் கேணல் ரமேஷ் அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் அவரை என்ன செய்வது என்பது தொடர்பாக மேலிடத்திடம் கேட்டவேளை.
கொழும்பில் இருந்து வந்த பதில் ராணுவத்தையே அல்லாட வைத்தது. அவர்கள் பேசிக்கொண்டதை நான் என் காதால் கேட்டேன். என்கிறார் கருணாவின் கையாள். “அதிர்வு” தற்போது பிரித்தானியா , பிரான்ஸ் , சுவிஸ் மற்றும் பல நாடுகளில் பத்திரிகையாக வெளிவந்து கொண்டு இருக்கிறது. வரவுள்ள (1 வாரத்தில்) இதற்கான தகவலோடு மேலும் பல விறுவிறுப்பான செய்திகளோடு வெளியாக உள்ளது. அதுவரை பொறுத்திருங்கள்…
-athirvu.com