குப்பை என்பது ஒரு தனிப்பட்ட மனிதரின் பிரச்சினை அல்ல. இலங்கையில் குப்பை மேடு சரிந்ததால் பறிபோன உயிர்கள் ஏராளம்.
இலங்கையை மட்டுமல்ல முழு உலகுக்கும் அச்சுறுத்தலாக குப்பை பிரச்சினை காணப்படுகின்றது. அதிலும் பிலாஸ்ரிக் மிக முக்கிய இடத்தை பெறுகின்றது.
உலகளவில் ஆண்டுதோறும் சுமார் 300 மில்லியன் மெட்ரிக் டன் ரெக்கார்ட்ஸ் பிலாஸ்ரிக் உற்பத்தி செய்யப்படுகின்றது.
இந்த உலகின் எந்த இடத்தையும் பிலாஸ்ரிக் மாசுபடுத்தக்கூடியதாக உள்ளது. இதனால் ஏற்படும் ஆபத்துக்களும் அதிகம்.
பிலாஸ்ரிக் உக்கக்கூடியதல்ல இதனால் புதைக்கவும் ஏலாது, நெருப்பு வைத்தாலும் காற்று மாசு படும். இதை அழிக்க முடியாமல் இருப்பது பாரிய பிரச்சினையாக காணப்பட்டது.
இந்த பிரச்சினைகளுக்கு விஞ்ஞானிகள் புது வழிமுறையை கண்டுபிடித்துள்ளனர்.
அதாவது பிலாஸ்ரிக்கை உணவாக உட்கொள்ளும் புழுக்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இதை ஸ்பெயினில் உள்ள கென்டபிரியா பல்கலைக்கழகத்தின் அபிவிருத்தி வனவிலங்கு விஞ்ஞானி இந்த வழிமுறையை முதலில் அடையாளம் கண்டுள்ளார்.
பின்னர் குறித்த பல்கலைக்கழகத்தில் சுற்றுச்சூழல் பொறியாளர்கள் “ஸ்டேன்வூட்” எனும் ஒரு குழு உருவாக்கியுள்ளனர்.
குறித்த புழுக்களைக்கொண்டு நடத்திய சோதனைகளில்,
100 புழுக்கள் இரவு முழுவதும் 92 மில்லிகிராம் பொலித்தீனை உட்கொண்டுள்ளன.
இதன்படி 100 புழுக்கள் ஒரு மாதத்திற்கு 5.5 கிராம் பொலித்தீன் பையை உணவாக உட்கொண்டுவிடும் எனவும் ஆராய்ச்சிகளின் மூலம் தெரியவந்துள்ளது.
இதன்மூலம் பொலித்தீன் பிரச்சினைக்கு ஒரு தீர்வு பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
-tamilwin.com