தொழில் நுட்பத்தில் தலை சிறந்து விளங்கும் நாடு அமெரிக்கா. இந்த நாடு ஏனைய நாடுகளை அடிமைப்படுத்த திட்டமிடுவதாக பல செய்திகள் வெளிவருகின்றன.
அணு ஆயுதமே அழிவிற்கான பிரதானமான ஆயுதமாக இப்போது கணிக்கப்படுகின்றது. ஆயினும் இதனையும் தாண்டி பல ஆயுதங்கள் அமெரிக்கா வசம் இருக்கின்றது.
துருவப் பகுதி உருகல், எல் நினோ மூலம் பஞ்சம், புவி வெப்பமயமாதல், ஓசோனில் ஓட்டை, திடீரென்று சுனாமி, வரலாறு காணாத வகையில் வறட்சி, திடீரென நகரும் தகடுகள் மூலம் நிலநடுக்கம் என நூற்றுக்கணக்கான செய்திகள் வந்து சேருகின்றது.
என்றாலும் இவை சரியான காலப்பகுதிகளில் குறிப்பிட்ட நாடுகளில் மட்டுமே ஏற்படுகின்றது. என்பதால் உலகின் காலநிலை மாற்றத்திற்கு செயற்கை ரீதியான காரணங்கள் இருக்கக் கூடும் என்பது ஆய்வாளர்களின் வாதம்.
அதன்படி அமெரிக்காவின் காலநிலை ஆயுதமான Chemtrails என்பதன் மூலம் அமெரிக்கா உலகை தனக்கு ஏற்றால் போல் கொஞ்சம் கொஞ்சமாக அழித்து கொண்டு வருகின்றது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதனை ஏற்கனவே நாம் பார்த்திருந்தோம். (குறித்த செய்தியைப் பார்க்க இங்கே அழுத்தவும்)
அந்தவகையில் அமெரிக்கா காலநிலையையும், இயற்கை அனர்த்தங்களையும் தனது தொழில் நுட்பத்தாலேயே கட்டுப்படுத்தி, செயற்கையாக அழிவுகளை ஏற்படுத்தும் செயற்பாட்டில் ஈடுபட்டு வருகின்றது.
இதனை நிரூபிக்கும் வகையில் ஆய்வு மையம் ஒன்று அமெரிக்காவில் இயங்கி வருவதாக ஆங்கில ஊடகங்கள் செய்திகளை வெளியிடுகின்றன.
வானிலை, காலநிலை மற்றும் பருவமாற்றங்களை ஆய்வு செய்வதற்காக உருவாக்கப்பட்டதாக கூறப்படும் ஆய்வு மையமே HAARP (High Frequency Active Auroral Research Program)
இந்த ஆய்வு மையம் அமெரிக்காவில் அமைக்கப்பட்டுள்ளது. வெளிப்படையில் இது காலநிலையை அவதானிப்பதற்கான ஆய்வு மையம் எனக் கூறப்பட்டாலும்,
செயற்கையாக காலநிலையை மாற்றி சூறாவளிகளையும் ஏற்படுத்தும் ஓர் இடமே இது என மேலைத்தேய ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.
இங்கு உயர் அலைவரிசை கோபுரங்கள் அமைக்கப்பட்டு, அதன் மூலம் அதி உயர் மின் காந்த அலைகளை உருவாக்கி அதனை மேகங்களுடனும், வளிமண்டலத்திலும் மோத விடப்படும்.
அந்த மோதல்களினால் வளி மண்டலத்தில் ஏற்படும் அதிர்வுகள் மூலம் சூறாவளிகளும், புயல்களும் ஏற்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த ஆய்வு மையத்தை மறைமுக ஆய்வு செய்த பலர் இந்தத் தகவல்களை உறுதிப்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
மின்காந்த அதிர்வெண்களை துல்லியமாக வளிமண்டலத்தில் பயன் படுத்தும் போது அவற்றின் மூலம் பூகம்பங்களையும், சுனாமிகளையும் ஏற்படுத்த முடியும் என HAARP பற்றி ஆய்வு செய்த மைக்கேல் சோசோடோவ்ஸ்கி எனப்படும் ஆய்வாளர் கூறுகின்றார்.
மேலும் இந்த இடத்திற்கு மேற்பரப்பில் உள்ள மேகங்கள் மற்றும் வளிமண்டலத்தில் ஏற்படும் மாற்றங்கள் புகைப்படங்களாகவும், காணொளிகளாகவும் வெளியிடப்பட்டு வருகின்றன.
எனினும் இவற்றை அமெரிக்கா மறுத்துக் கொண்டு வருகின்றது. அந்த இடத்தை ஆய்வு செய்வதற்கு எவரும் அனுமதிக்கப்படுவதில்லை என்பதும் சுட்டிக்காட்டப்படத்தக்கது.
அதேபோல் 2004 ஆம் ஆண்டு சுமாத்திராவில் ஏற்பட்ட நில நடுக்கத்திற்கும், அதனால் ஏற்பட்டதாக கூறப்படும் சுனாமி அனர்த்தத்திற்கும், அமெரிக்காவின் அணு ஆயுதப் பரிசோதனையே காரணம் என்ற ஓர் குற்றச்சாட்டும் அமெரிக்கா மீது இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும் காலநிலையை கட்டுப்படுத்த முடியும் என்பது இப்போதைய அறிவியலில் சாத்தியமான ஓர் விடயமே. அந்த வகையில் இதனையே இப்போது அமெரிக்கா தனது பிரதான ஆயுதமாக பயன்படுத்திக் கொண்டு வருவதாக கூறப்படுகின்றது.
இதனால் என்ன இலாபம்? அதாவது நேரடியாக ஓர் நாட்டின் வளர்ச்சியை அமெரிக்காவிற்கு முடக்க முடியாது. அதனை இயற்கை வடிவில் அரங்கேற்றவே இந்த கால நிலை ஆயுதத்தை அமெரிக்கா பயன்படுத்திக் கொண்டு வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
அமெரிக்கா வசம் இப்போது உள்ள இந்த தொழில் நுட்பத்தால் உலகத்தையே ஆட்டிப்படைக்கும் பயங்கர ஆயுதம் இருப்பதாகவும், இதன் மூலமே அமெரிக்கா வளர்ச்சியடைந்து கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
உலகை தனக்கு கீழ், தனது பொருளாதாரத்திற்கு கீழ் வைத்திருக்க அமெரிக்கா செய்து வரும் பதறவைக்கும் சதிக் திட்டமே, இந்த காலநிலை எனப்படும் ஆயுதம். இது குறித்து மேலைத்தேய ஊடகங்கள் அன்றாடம் பல செய்திகளை வெளியிட்டவாறே இருக்கின்றன.
-tamilwin.com