இராணுவம் அதிரடி! நாற்பது பயங்கரவாதிகள் பலி

சாட் நாட்டின் இராணுவத் முகாம்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டனர். இந்நிலையில் அதற்குப் பதிலடியாக அந்நாட்டு இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் நாற்பது பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

இது குறித்து சாட் நாட்டின் இராணுவத் தரப்பினர் வெளியிட்டுள்ள செய்தியில்,

அதிகாலையில் பயங்கரவாதிகள் இராணுவ முகாம் மீது நடத்திய தாக்குதலில் ஒன்பது பேர் கொல்லப்பட்டனர். எனினும் இராணுவத்தினரின் அதிரடித் தாக்குதலின் போது, நாற்பது பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

குறிப்பாக, நைஜீரியா, கமரூன், சாட் மற்றும் நைகர் உள்ளிட்ட பகுதிகளால் சூழப்பட்ட சாட் ஏரி போகோ ஹரம்களின் இலக்காகி வருகிறது.

இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பல்வேறு பயங்கரவாதிகள் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில் ஐ.எஸ். சார்பிலும் அச்சுறுத்தலை சாட் எதிர்நோக்கி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளதாக தெரியவருகிறது.

இதேவேளை, கடந்த எட்டு ஆண்டுகளாக நீடிக்கும் பிரச்சினையில் இதுவரை மொத்தம் 20,000 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 26 லட்சத்திற்கும் அதிகமானோர் தங்களது இருப்பிடங்களை இழந்துள்ளனர்.

இதனால் அந்நாட்டில் அமைதியற்ற சூழ்நிலை நிலவிவருகிறது. அடிக்கடி நிகழும் இந்தத் தாக்குதல்களால் மக்களின் இயல்பு வாழ்க்கை தொடர்ந்தும் பாதிக்கப்படுவதாகவும், இதற்க தீர்வினை அரசாங்கம் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்றும் அந்நாட்டு மக்கள் தெரிவித்துள்ளனர்.

-tamilwin.com