பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்ற பிரான்ஸ் ஜனாதிபதித் தேர்தலில் இமானுவல் மக்ரான் வெற்றி பெற்றுள்ளார்.
வரலாற்றில் முதன்முறையாக ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் என்பன இந்தத் தேர்தலை மிகவும் உன்னிப்பாக அவதானித்து வந்தன.
இந்நிலையில் இந்தத் தேர்தலில் வலதுசாரி கட்சியின் வேட்பாளரான முன்னாள் பொருளாதார அமைச்சர் இமானுவல் மக்ரான் இன்றைய தினம் நடந்த தேர்தலின் முடிவில் வெற்றி பெற்று ஜனாதிபதியானார்.
சோசலிஸ்ட் கட்சியியிருந்து விலகியவர் En Marche என்ற தனது சொந்த கட்சியை ஒரு வருடத்திற்கு முன்பு ஆரம்பித்துள்ளார்.
அவர் முதல் தடவையாக முக்கிய இரண்டு தரப்பு கட்சிகளையும் முதல் சுற்றில் வென்றிருந்தார். இந்த தேர்தலில் வெற்றி பெற்று பிரான்ஸ் ஜனாதிபதியாகி வரலாறு படைத்துள்ளார்.
இதேவேளை அவர் கலாசாரத்தை மீறி தன்னை விடவும் மூத்த வயதுடைய பெண்ணை திருமணம் செய்துள்ளார்.
Macron தனது 15 வயதில் உயர்நிலைப் பாடசாலையில் வைத்து Trogneux என்ற பெண்னை சந்தித்துள்ளார். அதன்போது 40 வயதான அவர் திருமணம் முடித்து மூன்று பிள்ளைகளின் தாயும் இலக்கிய ஆசிரியராகவும் செயற்பட்டுள்ளார்.
அவர் ஒரு முதலாளித்துவ குடும்பத்தை சேர்ந்தவராகும். 11ஆம் வகுப்பில் கல்வி கற்ற Macronக்கு Trogneux நாடகம் ஒன்றை எழுத உதவியுள்ளார்.
இந்த வேலை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இருவரையும் இணைய வைத்துள்ளதுடன் நம்ப முடியாத நெருக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் அவர்களது பெற்றோர் இந்த பிணைப்பினை உடைத்துள்ளனர். Macron தன்னுடைய இறுதி வருட கற்கையை நிறைவு செய்வதற்காக பாரிஸில் ஒரு உயர் பாடசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
“நீ என்னை விலக்க மாட்டாய். நான் திரும்பி வருகிறேன், நான் உன்னை திருமணம் செய்துகொள்கிறேன்,” என்று அவர் பகிரங்கமாக கூறிவிட்டு சென்றுள்ளார்.
தூரம் அவர்களை பிரிக்கவில்லை. இறுதியில் Trogneux தன்னுடைய முன்னாள் கணவனை விட்டுவிட்டு பாரிசுக்கு சென்றுள்ளார்.
நாங்கள் இருவரும் தொலைபேசி ஊடாக அதன் பின்னர் நேரத்தை செலவிட்டோம். அவர் பொறுமையாக அனைத்து தடைகளையும் உடைத்தார் என அவரது மனைவி Trogneux குறிப்பிட்டுள்ளார்.
இறுதியாக 2007 ஆம் ஆண்டு அவர்களின் திருமணம் வட கடற்கரை ரிசார்ட்டில் நடைப்பெற்றுள்ளது.
தனது திருமண உரையில், Macron, Trogneuxஇன் குழந்தைகள் அவருக்கு உதவியமைக்காக நன்றியும் தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் Macron தன்னை விடவும் 24 வயது மூத்த உயர்நிலைப் பாடசாலை ஆசிரியரை திருமணம் செய்துள்ளார்.
இன்று நடைபெற்ற பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற மக்கள் வாக்கெடுப்பில் மக்ரேன் வெற்றி பெற்று பிரான்ஸ் வரலாற்றில் சாதனை படைத்துள்ளார்.
-tamilwin.com