அமெரிக்கா-தென்கொரியா வடகொரிய அதிபரை கொல்ல சதி திட்டம்! கடுமையான நடவடிக்கை

வடகொரிய அதிபரான கிம்-ஜங்-உன் ஐ கொல்ல சதித்திட்டம் தீட்டியதற்கு எதிராக கடுமையான நடவடிக்கை பாயும் என்று அந்நாட்டு உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

வடகொரியா உலக நாடுகளின் எதிர்ப்புகளை மீறி அணு குண்டு மற்றும் ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கு அமெரிக்கா, தென் கொரியா உட்பட பல்வேறு நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், அமெரிக்க உளவுத்துறையும், தென்கொரிய அரசும் இணைந்து உயிரி ஆயுதம் கொண்டு வடகொரிய அதிபரை கொலை செய்ய முயன்றதாக கடந்த வாரம் அந்நாட்டு அரசுத் தொலைக் காட்சி செய்தி வெளியிட்டது.

இது குறித்து விரிவாகப் பேசுவதற்காக அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் இன்று பன்னாட்டுத் தூதர்கள் சந்திப்புக் கூட்டம் நடத்தப்பட்டது.

இதில் பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் Han Song Ryol, அதிபர் கிம் ஜாங்-உன் ஐ கொல்ல சதித்திட்டம் தீட்டியதற்கு எதிராக கடுமையான நடவடிக்கை பாயும் என தெரிவித்துள்ளார்.

-tamilwin.com