பாஸ் பிகேருடன் உறவுகளை முறித்துக்கொள்ள முடிவு செய்ததை அடுத்து சிலாங்கூர் ஆட்சிக்குழுவில் இடம்பெற்றுள்ள மூன்று பாஸ் கட்சியினர் விலக வேண்டும் என்று கேட்டுக்கொள்வது சரியான முடிவுதான் என்கிறார் பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங்.
இதன் தொடர்பில் இதற்குமுன் தாம் கருத்துச் சொன்னதில்லை என்று குறிப்பிட்ட லிம், அம்மூவரையும் பதவி விலகுமாறு சிலாங்கூர் மந்திரி புசார் அஸ்மின் அலியே கேட்டுக்கொண்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருப்பதால் “அதை நான் முழுமையாக ஆதரிக்கிறேன்” என்றார்.
அஸ்மின் மாநில ஆட்சிக்குழுவிலிருந்து விலக வேண்டும் என அம்மூவரிடமும் வலியுறுத்தியிருப்பதாகக் கூறும் த ஸ்டார் செய்தி குறித்து கருத்துரைத்தபோது லிம் இவ்வாறு கூறினார்.
மலேஷியா மக்களுக்கு PAS katchi தேவையில்லாத ஒன்று லஞ்ச ஊழல் தலைவனோடு கூட்டு சேர்ந்து தீ…. வாதத்தை பரப்பும் திருட்டு கட்சயியே UMNOVUM மற்றும் PAS போன்ற கட்சிகள். இந்த இரண்டு கட்சிகளும் அழிந்துபோவது நிச்சயம் . இஸ்லாம் நாமத்தை பயன்படுத்தி இஸ்லாத்துக்கு எதிரான லஞ்சம் வாங்கும் கட்சிதான் இவைகள் .
பக்காத்தானை சுக்கு நூறாக உடைத்திட அல்தான்துயா நஜிப் லிம் கிட் சியாங்கிடமும் அவரது மகனிடமும் ஒப்படைத்தார். ஆக, அப்பனுக்கும், மவனுக்கும், நஜீப்பிற்குமே இது மகத்தான வெற்றி.