சிரியாவில் பெண்கள் குழந்தைகளுக்கு எதிராக ஆசாத் அரசு இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியுள்ளதை அங்குள்ள பெண்கள் இருவர் அம்பலப்படுத்தியுள்ளனர்.
சிரியாவிவில் கடந்த ஆறு ஆண்டுகளாக அந்த நாட்டு ராணுவத்துக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே உள்நாட்டுச் சண்டைகள் நடைபெற்று வருகின்றன. இந்தச் சண்டையில் அப்பாவி பொதுமக்களே இருதரப்பின் தாக்குதல்களிலும் இறந்து வருகின்றனர்.
ஜனாதிபதி பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் யுத்தம் புரிந்து வருகின்றனர். இதில் இரு தரப்பினரும் பயங்கர ஆயுதங்கள் கொண்டு சண்டையிட்டு வருகின்றனர்.
இதனிடையே ஆசாத் அரசு அப்பாவி பொதுமக்கள் மீது இரசாயன ஆயுதங்களை பயன்படுத்துவதாக எழுந்த குற்றச்சாட்டிற்கு அவர் மறுப்பு தெரிவித்து வந்த நிலையில், கடந்த ஆண்டு குழந்தைகள் பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் மீது இரசாயன தாக்குதல் நடைபெற்றுள்ளதை, குறித்த தாக்குதலில் படுகாயமடைந்த இரு பெண்கள் வெளிச்சத்துக்கு கொண்டுவந்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட The Organisation for the Prohibition of Chemical Weapons (OPCW) என்ற அமைப்பு விரிவான அறிக்கை ஒன்றை ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலுக்கு சமர்ப்பித்துள்ளது.
அதில் கடந்த ஆண்டு செப்டம்பர் 16 ஆம் திகதி Um Hosh பகுதியில் நடந்த தாக்குதலில் இரசாயன ஆயுதங்களை ஆசாத் அரசு பயன்படுத்தியுள்ளது.
இதில் பெருமளவு பாதிப்புக்குள்ளானது பெண்களும் குழந்தைகளும் என அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
குறித்த பெண்களில் இருவரது உடலை சோதனைக்கு உட்படுத்திய அதிகாரிகள் அதில் sulphur mustard வகை இரசாயனம் பயன்படுத்தியுள்ளதை உறுதி செய்துள்ளது.
கடந்த 2013 ஆம் ஆண்டு ஆசாத் தலைமையிலான சிரியா அரசு தம்மிடம் உள்ள அனைத்து வகையான இரசாயன ஆயுதங்களையும் அழிக்க ஒப்புக்கொண்டிருந்தது. ஆனால் 2014 ஆம் ஆண்டு மீண்டும் இரசாயன தாக்குதலில் ஆசாத் அரசு ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
-lankasri.com