வடகொரியா அடுத்து இதைத் தான் செய்யப்போகிறது: தென்கொரியா எச்சரிக்கை தகவல்

north_south_001வடகொரியா மிகப்பெரிய அணுசக்தி திட்டத்தை தயாரிப்பதாக தென்கொரிய பாதுகாப்பு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வடகொரியா தொடர்ந்து அணு குண்டு மற்றும் ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கு உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தும் அது காது கொடுத்து கேட்பது போல் இல்லை.

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வடகொரியா ஏவுகணை சோதனையை நடத்தியது. அது கண்டம் விட்டு கண்டம் தாவும் திறன் கொண்டது எனவும், அது அமெரிக்காவை தாக்குவதற்கு சாத்தியம் உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.

அந்த சோதனை வெற்றிபெற்றதை அந்நாட்டு அதிபர் கிம் ஜங் உன் தனது இராணுவ வீரர்களுடன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.

இந்நிலையில் தென்கொரிய பாதுகாப்பு அமைச்சகம் ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதில் வடகொரியா கடந்த ஞாயிற்றுக்கிழமை நடத்திய ஏவுகணை சோதனை வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, மிகப் பெரிய அணுசக்தி திட்டத்தை தயாரித்து வருவதாகவும், அது உலகநாடுகளுக்கு அச்சுறுத்தும் வகையில் இருக்கக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.

அதுமட்டுமின்றி மீண்டும் ஒரு ஏவுகணை சோதனைக்கு தயாராகி வருவதாகவும், அது வடகொரியாவின் Punggye-ri பகுதியில் நிலைநிறுத்தப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

நிலைநிறுத்தப்பட்டுள்ள ஏவுகணை எந்நேரமும் சோதனைக்கு உட்படுத்தப்படலாம் என்றும் அவ்வாறு சோதனை நடத்தப்பட்டால் தென்கொரியாவின் முக்கிய பகுதியில் அந்த ஏவுகணை வந்து விழுவதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-lankasri.com