உலகம் முழுவதும் சாலை விபத்தில் சிக்கி அதிகளவில் 10 முதல் 19 வயதுடைய இளம் வயதினரே இறக்கிறார்கள் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள முக்கிய அறிக்கையில், சாலை விபத்துக்களில் அதிகம் உயிரிழப்பது இளம் வயதினர்கள் தான்.
உலகளவில் ஒவ்வொரு நாளும் 3000 பேர் வீதம், ஆண்டுக்கு 12 லட்சம் பேர் உயிரிழக்கிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கடந்த 2015-ல் 10 – 19 வயதுடைய இளம் வயதினர்கள் 1,15,302 பேர் சாலை விபத்தில் இறந்துள்ளார்கள்.
அதே வயதினர்கள் சுவாச தொற்று பிரச்சனையால் 72,655 பேரும், தற்கொலையால் 67,149 பேரும், தண்ணீரில் மூழ்கி 57,125 பேரும் உயிரிழந்துள்ளார்கள்.
இந்த உயிரிழப்புகளில் மூன்றில் இரண்டு பங்குகள் ஆப்பிரிக்கா மற்றும் தென் கிழக்கு நாடுகளில் அரங்கேறியுள்ளதும் தெரியவந்துள்ளது.
அதே போல, 15 – 19 வயதுடைய பெண்கள் அதிகம் பேர் மகப்பேறு சிக்கல்களால் உயிரிழந்துள்ளதாவும், தற்கொலை சம்பவங்களே இளம் வயதினர் உயிரிழக்க முக்கிய காரணமாக உள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
-lankasri.com
வளர்ந்து வரும் உலகிற்கு சாலை விபத்துகள் ஒரு சவால் என்பதில் ஐயமில்லை.பெற்றோர்கள் தங்களது பதின்ம வயது பிள்ளைகளை அதிகம் கண்காணிக்க வேண்டும்.