அரசு ஆதரவு கிராமங்களில் வேட்டையாடிய ஐ.எஸ்: 50 பேர் பலி

isissசிரியாவின் ஹமா மாகாணத்தில் அரசு கட்டுப்பாட்டில் உள்ள இரண்டு கிராமங்களில் ஐ.எஸ் தீவிரவாதிகள் நடத்தில் தாக்குதலில் 50 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டுள்ளனர்.

சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை குறி வைத்து ஜனாதிபதி ஆசாத் தலைமையிலான அரசுப் படைகள் தாக்குதல் நடத்தி வருகிறது.

அரசுப் படைகளுக்கு ஆதரவாக ரஷ்ய விமானப் படைகளும் ஈரான் படைகளும் தாக்குதல் நடத்தி வருகின்றன.

அதேபோல், அரசு கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை குறி வைத்து ஐ.எஸ். தீவிரவாதிகளும் அவ்வவ்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், சிரியாவின் ஹமா மாகாணத்தில் அரசு கட்டுப்பாட்டில் உள்ள இரண்டு கிராமங்களில் ஐ.எஸ் தீவிரவாதிகள் திடீரென்று கண்மூடித்தனமான தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் அப்பாவி பொதுமக்கள் உள்ளிட்ட 50 பேர் கொல்லப்பட்டனர்.

இது தொடர்பாக பிரிட்டனை மையமாக கொண்டு செயல்படும் சிரிய மனித உரிமைகள் கண்காணிப்பு மையம் தரப்பில், இரண்டு கிராமங்களிலும் 15 அப்பாவி பொதுமக்கள் மற்றும் 27 அரசு ஆதரவு படை வீரர்கள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 10 பேரின் உடல்கள் யார் என்பது அடையாளம் கண்டுபிடிக்கப்படாமல் உள்ளது.

இதனால் குறித்த தாக்குதல் ஐ.எஸ். அமைப்பை சேர்ந்த 10 பேரும் உயிரிழந்திருக்கலாம் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

-lankasri.com