பிகேஆர் இளைஞர்: இடைப்பட்ட காலத்திற்கு வான் அசிஸா பிரதமராக இருக்க வேண்டும்

 

Wanazizainterimpmஅன்வார் இப்ராகிம் விடுவிக்கப்படும் வரையில் பிகேஆர் தலைவர் டாக்டர் வான் அசிஸா வான் இஸ்மாயில் நாட்டின் இடைக்காலப் பிரதமராக பதவி ஏற்க வேண்டும் என்று பிகேஆர் இளைஞர்கள் விரும்புகிறார்கள்.

“அவர் நமது இடைக்காலப் பிரதமர், அவர் நமது முதல் பெண் பிரதமர்”, என்று பிகேஆர் இளைஞர் பிரிவுத் தலைவர் நிக் நாஸ்மி நிக் அஹமட் இளைஞர் பிரிவு காங்கிரஸில் ஆற்றிய முடிவு உரையில் கூறினார்.

நிக் அவரது பேச்சின் தொடக்கத்தில், பிரதமர் பதவிக்கு பக்கத்தான் ஹரப்பானின் தேர்வாக அன்வாரை முன்மொழிந்தார்.

இப்போது, பார்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா (பெர்சத்து) உருவாகியிருப்பது எதிரணியில் அன்வாரின் தலைமைத்துவம் ஒரு கேள்விக்குறியாகியுள்ளது. அக்கட்சி டாக்டர் மகாதிர் அல்லது முகைதின் யாசின் பிரதமராகுவதை விரும்புகிறது.

ஆனால், மகாதிர் இதைப்பற்றி இப்போது பேசக் கூடாது, ஏனென்றால் அது கூட்டணிக்குள் போட்டியை ஏற்படுத்தும் என்று அவர் கருதுகிறார்.