சர்வதேச நீதிமன்றம் மற்றும் கம்போஜியாவின் சர்வதேச போர்க்குற்ற விசாரணை நீதிமன்றின் நீதிபதியாகக் கடமையாற்றிய மொடோனு கூச் இலங்கைக்கு அடுத்த மாத நடுப்பகுதியில் வருகை தரவுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில், இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட போர்க்குற்ற விசாரணைத் தீர்மானத்துக்கு அமைய உள்ள விசாரணைப் பொறிமுறைமை உருவாக்கப்படுவதற்கு ஆலோசனை வழங்குவதே ஜப்பானியரான கூச்சின் இலங்கைப் பயணத்துக்கான முக்கிய நோக்கம் என்று தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையில் காணாமல்போனோர் தொடர்பில் விசாரணை நடத்திய பரணகம ஆணைக்குழுவின் ஆலோசனை குழுவிலும் மொடோனு கூச் அங்கம் வகித்திருந்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க உள்ளிட்ட பல்வேறு முக்கிய தலைவர்களையும் மொடோனு கூச் சந்திக்கவுள்ளார்.
இதேவேளை, மொடோனு கூச் இதற்கு முன்னரும் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-tamilwin.com