ஆப்கானிஸ்தானின் காபூலில் இன்று நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலில் 80 பேர் பலியாகியுள்ளனர்.
நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து காபூல் பொலிஸின் செய்தித் தொடர்பாளர் பஷிர் மஜித் கூறுகையில், காபூலிலில் இன்று ஜேர்மன் தூதரக கட்டிடத்தின் நுழைவாயிலில் கார் குண்டுவெடிப்பு நடத்தப்பட்டது.
தீவிரவாதிகள் யாரை குறி வைத்து இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளார்கள் என்று தற்போது கூறமுடியாது.
இந்த குண்டுவெடிப்பில் 80 பேர் பலியாகினர், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்றார்.
இந்த தாக்குதலை தலிபான் தீவிரவாதிகள் நடத்தியிருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர்.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் பிரித்தானிய தூதரகம் அருகே கார் வெடிகுண்டு மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதில் 50க்கும் மேற்பட்டோர் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
காபூலின் வாசிர் அக்பர் கான் பகுதியில் பிரித்தானியா, இந்தியா, ஜேர்மனி உள்ளிட்ட வெளிநாடுகளின் தூதரகங்கள் அருகருகே அமைந்துள்ளன.
இந்த இடத்திற்கு அருகே தான் ஜனாதிபதி மாளிகையும் அமைந்துள்ளது.
இந்த பகுதியில் சில மணிநேரத்துக்கு முன்னர் சக்தி வாய்ந்த கார் வெடிகுண்டு மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதில் 67 பேர் உயிரிழந்திருப்பார்கள் அல்லது படுகாயமடைந்திருப்பார்கள் என நம்பப்படுகிறது.
பலர் படுகாயமடைந்து மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டதாகவும் அங்கு பெரும் குழப்பமான சூழ்நிலை நிலவுவதாகவும் செய்திகள் வெளியாகி கொண்டிருக்கிறது.
பிரித்தானிய வெளியுறவு துறை அலுவலகம் இந்த சம்பவத்தை கண்காணித்து வரும் நிலையில், பிரித்தானிய குடிமக்கள் இதில் பாதிக்கப்பட்டுள்ளார்களா என்ற விவரம் இன்னும் தெரியவில்லை.
இச்சம்பவத்தை நேரில் பார்த்தவர் கூறுகையில், வெடிகுண்டு வெடிப்பதற்கு முன்னர் பூமி அதிர்வதை பார்த்து நிலநடுக்கம் என நினைத்ததாக கூறியுள்ளார்.
பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ஜேர்மனி தூதரகத்தின் அருகே கார் வெடிகுண்டு மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அதன் அருகில் மிக முக்கிய அலுவலகங்களும் இருந்தன, இந்த தாக்குதல் நிகழ்த்தப்பட்டதற்கான காரணத்தை கணிப்பது கடினமாக உள்ளதாக கூறியுள்ளார்.
குண்டு வெடித்த போது சம்பவம் நடந்த இடத்திலிருந்து 100 மீட்டர் தொலைவில் இருந்த வீடுகளிலும் அதன் தாக்கத்தை உணர்ந்ததாக மக்கள் கூறியுள்ளார்கள்.
குண்டுவெடிப்பு காரணமாக அப்பகுதியே கரும் புகை மூட்டமாக காட்சியளிப்பதுடன், கட்டிடங்களின் ஜன்னல் கண்ணாடிகள் சுக்குநூறாக உடைந்துள்ளன.
-lankasri.com