உலக அழிவிற்கு வித்திடும் டிரம்ப்! அமெரிக்கா வெளியேறுவதாக அதிரடி அறிவிப்பு

புவி வெப்பமயமாதலை தடுக்க உலக நாடுகளின் ஒத்துழைப்புடன் கடந்த ஆண்டு போடப்பட்ட பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறுவதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவித்துள்ள்ளார்.

பல ஆண்டுகள் நடைபெற்ற சிக்கலான பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர் கடந்த ஆண்டு கையழுத்தானது பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தம்.

இந்த ஒப்பந்தத்திற்கான முக்கிய நோக்கமே புவிவெப்ப மயமாதலை 2 டிகிரி செல்சியஸுக்கு மிகாமல் கட்டுப்படுத்துவதுதான்.

புவி வெப்பமடைதலுக்குக் காரணமான கார்பன் டை ஆக்சைடு உள்ளிட்ட பசுமை இல்ல விளைவு வாயுக்கள் வெளியேற்றத்தை பெருமளவில் கட்டுக்குள் கொண்டுவரவே இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்த ஒப்பந்தத்தில் இணைந்திருக்கும் நாடுகள் தங்களுடைய கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றத்தை கடுமையாக குறைக்க வேண்டும் என்பதே இந்த ஒப்பந்தத்தின் சிறப்பம்சம்.

ஆனால் புதைபடிவ எரிபொருட்களின் பயன்பாட்டை குறைப்பது பொருளாதாரத்தில் நேரடியாக பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் இந்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவது ஒரு சவாலான காரியமாகவே பார்க்கப்பட்டு வந்தது.

இந்தியா, சீனா, ரஷ்யா, அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட 195 நாடுகள் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தது.

இந்நிலையில், பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறுவதாக டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இந்த முடிவிற்கு அமெரிக்காவின் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், பொருளாதார நிபுணர்கள் என பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இன்று உலக நாடுகள் அனைத்திற்கும் பொதுவான, முக்கியமான பிரச்சினை என்று பார்த்தால் அது உலகம் வெப்ப மயமாதல் தான். சர்வதேச அளவில் பசுமை இல்ல விளைவு வாயுக்களை வெளியிடுவதில் சீனாவிற்கு அடுத்து அமெரிக்கா இரண்டாவது இடத்தில் உள்ளது.

இந்த ஒப்பந்தத்தை பின்பற்றுவதால் தொழிற்சாலைகள், எண்ணெய் நிறுவனங்கள் உள்ளிட்டவைகள் பொருளாதார ரீதியாக பின்னடைவை சந்திக்கும் என்பதால் டிரம்ப் இந்த முடிவை எடுத்துள்ளார்.

ஆனால் டிரம்பின் இந்த முடிவு உலகை அழிவிற்கு அழைத்துச் செல்லும் ஒரு ஆரம்பப்புள்ளி என்பதை அவர் உணர மறுத்துள்ளார் என்று கூறப்படுகிறது.

-tamilwin.com