அபூர்வ அரசியல்வாதி: இப்படியான ஒருவர் இல்லையே என்று ஏங்கும் தமிழர்கள்

அண்மையில் பெய்த கடும் மழையினால் ஏற்பட்ட பெரு வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு தரப்பினரும் உதவி வருகின்றனர். மக்களோடு மக்களாக களத்தில் இறங்கி அரசியல்வாதி ஒருவரும் கடுமையாக உழைத்திருக்கின்றார்.

அவர் வேறுயாருமல்ல களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தேவரப்பெரும.

பொதுவாகவே இந்திய மற்றும் இலங்கை அரசியல்வாதிகள் வெளிநாட்டு அரசியல்வாதிகளுடன் ஒப்பிடும் போது வித்தியாசமானவர்கள் .

பெரும்பாலும் தேர்தல் நேரங்களில் மட்டுமே மக்களை அணுகுபவர்களாகவும் தேர்தல் முடிந்ததும் மக்களை மறந்து விடுபவர்களாகவும் தான் இருக்கின்றார்கள்.

வெள்ளை வேட்டி வெள்ளை சட்டை அல்லது கோர்ட் ஷூட் அணிந்து கசங்காத உடையுடன் விலை கூடிய சொகுசு வாகனத்தில் பாதுகாப்பு படைவாரங்களுடன் வலம் வருவதே வழமை.

ஆனால் இவர்களுக்கு மத்தியில் பாலித வித்தியாசமானவராகவும் மக்களுடன் மக்களாக இணைந்து பணியாற்றும் ஒரு சாதாரண சேவகனாக இருப்பது சிங்கள மக்களுக்கு மட்டுமல்லாமல் தமிழ், முஸ்லிம் மக்களுக்கும் மிகுந்த வியப்பை ஏற்படுத்தியுள்ளதாம்.

வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாக களத்தில் இறங்கி உதவிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பலராலும் பகிரப்பட்டு வருகின்றது.

தலைவன் என்பவன் மக்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்பற்கு சிறந்த உதாரணம் பாலித. தற்போதைய நிலையில் எமக்கு இப்படி ஒரு எளிமையான அரசியல் தலைவர் யாரும் இல்லையே என்று தமிழ் மக்கள் பலர் கருத்து வெளியிட்டுள்ளனர்.

 -tamilwin.com
TAGS: