அமெரிக்க தொழில் பூங்காவில் துப்பாக்கி சூடு: 5 பேர் பலி

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் அமைந்துள்ள தொழில் பூங்கா ஒன்றில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 5 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புளோரிடா மாகாணத்தின் ஆர்லாண்டோ பகுதியில் அமைந்துள்ள தொழில் பூங்கா ஒன்றில் திடீரென்று மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதில் 5 பேர் சம்பவ இடத்தில் கொல்லப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து தகவலறிந்து விரைந்து வந்த பொலிசார் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். மேலும் குறித்த தொழில் பூங்கா சுற்றுவட்டாரப் பகுதியில் பாதுகாப்பு கருதி பொலிசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். துப்பாக்கி சூடு நடத்திய நபர் அங்குள்ள ஒரு தொழிலாளி எனவும், இது தீவிரவாத தாக்குதல் அல்ல எனவும் முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

மட்டுமின்றி துப்பாக்கி சூடு நடத்திய நபர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனவும் பொலிஸ் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் இந்த தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை என உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டு யூன் 12 ஆம் திகதி பல்ஸ் இரவு விடுதியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 49 பேர் பரிதாபமாக கொல்லப்பட்ட நினைவு நாளுக்கு இன்னும் ஒருவாரமே உள்ள நிலையில் இந்த துப்பாக்கி சூடு நடந்துள்ளது.

-lankasri.com