கட்டார் உடனான உறவை துண்டித்த வளைகுடா நாடுகள்

கட்டார் நாட்டுடனான இராஜாங்க உறவுகளை துண்டித்துக்கொள்வதாக சவுதி அரேபியா, எகிப்து, பக்ரைன் மற்றும் ஐக்கிய அரபு கூட்டமைப்பு நாடுகள் அறிவித்துள்ளன.

சவுதி செய்தி நிறுவனமான எஸ்பிஏ இது குறித்து வெளியிட்டுள்ள செய்தியில், சவுதி அரேபியா தனது தூதரக உறவுகளை துண்டித்துக்கொண்டுள்ளதோடு, கட்டார் நாட்டு எல்லைகளை மூடிவிட்டதாக கூறியுள்ளது.

தீவிரவாதத்தில்இருந்து நாட்டை பாதுகாக்கும் நோக்கில் சவுதி இந்த நடவடிக்கையை எடுத்ததாக அது செய்தி வெளியிட்டுள்ளது.

 

அனைத்து போக்குவரத்தும் ரத்து என எஸ்பிஏ செய்தி நிறுவனத்திற்கு, சவுதி அதிகாரி ஒருவர் பின்வருமாறு பேட்டி அளித்துள்ளார். கட்டாருக்கான தரைவழி, வான்வழி மற்றும் கடல் வழி போக்குவரத்து என அனைத்தையும் சவுதி துண்டித்துவிட்டதாகவும், இராஜாங்க ரீதியிலான தொடர்பையும் துண்டித்து விட்டதாகவும் கூறியுள்ளார்.

 

எகிப்தும் கடந்த சில ஆண்டுகளாக கட்டார் நாட்டு அதிகாரிகளின் அத்துமீறல்களை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சவுதி அறிவித்துள்ளது. ஐக்கிய அரபு நாடுகளை போலவே எகிப்தும் கூட கட்டார் தீவிரவாதத்திற்கு உதவுவதாக தெரிவித்து, இராஜாங்க உறவுகளை துண்டித்துள்ளது.

பக்ரைனும் தடை,கட்டார் நாட்டு கப்பல்கள், விமானங்கள் எகிப்து வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பக்ரைன் செய்தி ஏஜென்சி வெளியிட்டுள்ள செய்தியில் தங்கள் நாடும் கட்டாருடன் தொடர்பை துண்டிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீவிரவாதத்திற்கு எதிரான போர் சவுதி அரேபியா தலைமையிலான அரபு கூட்டமைப்பு படைகள், ஏமனில் கிளர்ச்சியாளர்கள், தீவிரவாதிகளுக்கு எதிராக சண்டையிட்டு வருகின்றன. ஆனால் கட்டார் நாடோ, அல்கொய்தா, ஐஎஸ்ஐஎஸ் போன்ற தீவிரவாத அமைப்புகளுக்கு உதவி செய்துவருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதையடுத்து அந்த நாட்டை தங்கள் நேச நாடுகள் பட்டியலில் இருந்து வெளியேற்றியுள்ளன பிற அரபு நாடுகள்.

குற்றச்சாட்டுகள் சிரியா நாட்டு அதிபர் பஷர் அல்-அசாத்துக்கு எதிராக போராடும் கிளர்ச்சியாளர்களுக்கு கட்டார் உதவுவதாகவும், முன்னாள் ஹமாஸ் தலைவர் காலீத் மெஷலுக்கு அடைக்கலம் கொடுத்ததாகவும் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளது. ஆப்கானிஸ்தானிலுள்ள தாலிபான்கள் 2013ல் கத்தார் தலைநகர் தோகாவில் அலுவலகம் திறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் குற்றச்சாட்டு கட்டாரில் 2022ல் உலக கோப்பை கால்பந்தாட்ட போட்டி நடைபெற உள்ளது. ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளை ஒழிக்கும் அமெரிக்கா தலைமையிலான கூட்டணியில் கட்டார் ஒரு நாடாகும். ஆனால் கட்டார் தீவிரவாத அமைப்புகளுக்கு நிதி உதவி செய்வதாக சமீபத்தில் அமெரிக்க பத்திரிகைகளும் குற்றம்சாட்டியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

-tamilwin.com