மியன்மார் விமான விபத்தில் திடீர் திருப்பம்! காணாமல் போனோர் 120 பேரில் 15 பேர் உயிருடன் மீட்பு!

விபத்துக்குள்ளானதாக அறிவிக்கப்பட்ட விமானத்திலிருந்து 15 பயணிகளை உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக மீட்புக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

மியன்மாரில் 116 பேருடன் சென்ற இராணுவ விமானம் இன்று மதியம் திடீரென்று தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டு மாயமானது.

மியன்மாரின் மையக் நகருக்கும் யங்கூன் நகருக்கும் இடையில் 18,000 அடிக்கு மேல் பறந்து கொண்டிருந்த போது விமானம் காணாமல் போனாதாக கூறப்படுகிறது.

விமானத்தை தேடுவதற்கு நான்கு கடற்படைக் கப்பல்கள் மற்றும் இரண்டு விமானங்கள் அனுப்பப்பட்டிருந்தன.

இந்நிலையில் விமானத்தின் பாகங்கள் அந்தமான் கடற்பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்த இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

டவெய் நகரத்தின் மேற்கே சுமார் 20 மைல் தொலைவில் அந்தமான் கடற்பகுதியில் விமானத்தின் பாகங்கள் கிடைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சற்று முன்னர் வெளியாகியுள்ள தகவலின் படி, தேடுதலின் போது விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்தவர்களில் 15 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர் என்றும், மீட்புப் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கிப்பட்டுள்ளது.

எனினும் யார் யார் மீட்கப்பட்டனர் என்பது குறித்து இதுவரை எந்த தகவல்களும் வெளியாகவில்லை.

இதேவேளை, முன்னர் 116 என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்பொழுது விமானத்தில் 120 பேர் வரை பயணத்திருக்கிறார்கள் என்றும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

-tamilwin.com