பொது பலசேனா அமைப்பின் பொது செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை ஐ.எஸ் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு இலக்கு வைத்துள்ளதாக அந்த அமைப்பின் நிறைவேற்று அதிகாரி டிலாந்த விதானகே தெரிவித்துள்ளார்.
அத்துடன், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை கைது செய்வதற்கு 200க்கும் மேற்பட்ட பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டதை போன்று ஞானசார தேரரை கைது செய்ய பொலிஸார் சுற்றி வளைத்திருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
கிழக்கு மாகாணத்தில் ஐ.எஸ் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு வேகமாக பரவி வருகின்றது. அந்த அமைப்பின் ஊடாக ஞானசார தேரரின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
ஞானசார தேரருக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக பாதுகாப்பு அமைப்புகள் அறிவித்துள்ளன. இதன் காரணமாகவே பொது நிகழ்வுகளின் பங்குபெறாது மறைந்து வாழ்ந்து வருகின்றார்.
இதேவேளை, ஞானசார தேரரிடம் வாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொள்ளவே உயர் நீதிமன்றம் அழைப்பு விடுத்திருந்தது. மாறாக கைது செய்வதற்கு உத்தரவு பிறப்பிக்கவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
-tamilwin.com