சவுதி அரேபியாவுக்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினர் விடுத்துள்ள மிரட்டல்!

isissஉங்கள் இடத்திலிருந்தே தாக்குவோம்! சவுதியை மிரட்டும் ஐஎஸ்ஐஎஸ் ராகினி ஆத்ம வெண்டி மு.

கத்தார் விவகாரத்தில் வளைகுடா நாடுகள் மத்தியில் பதற்றம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

இந்நிலையில் கத்தார் நாட்டை தனிமைப்படுத்துவதாக அறிவித்த சவுதி அரேபியாவுக்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினர் வெளிப்படையான மிரட்டல் விடுத்துள்ளனர்.

கத்தார் உடனான அத்தனை உறவுகளையும் முறிப்பதாக வளைகுடா நாடுகள் அறிவித்திருந்தன.

தீவிரவாதத்துக்கு கத்தார் துணைபுரிவதாகக் குற்றம் சுமத்தப்பட்டது. இந்தக் குற்றத்தை கத்தார் முற்றிலுமாக மறுத்து வருகிறது.

இந்நிலையில், கத்தாரிடமிருந்து நிதியுதவி பெறுவதாகக் கூறப்படும் தீவிரவாத அமைப்புகளுள் ஒன்றான ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தினர் நேற்று ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளனர்.

அதில், கத்தாருக்கு எதிரான நடவடிக்கையை தொடங்கி வைத்த சவுதி அரேபியாவுக்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினர் வெளிப்படையாக தாக்குதல் மிரட்டல் விடுத்துள்ளனர்.

ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினர் வெளியிட்டுள்ள அந்த வீடியோ பதிவில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் ஐந்து பேர் முகமூடி அணிந்து பேசுகின்றனர்.

அதில், ‘தற்போது ஈரானுக்கு பிறகு, உங்களுக்கான முறைதான் சவுதி அரேபியா. உங்கள் சொந்த இடத்திலேயே தாக்குகிறோம்’ என மிரட்டல் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

இதனால் வளைகுடா நாடுகளில் பதற்றம் அதிகரித்துள்ளது. பொதுமக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் இந்த மிரட்டல் வீடியோ அதிக கவனத்துடன் கையாளப்படும் என சவுதி அரசு தெரிவித்துள்ளது

– Vikatan