புலி கொடியுடன் ஆறு நாடுகளில் போராட்டம் நடத்தும் புலம்பெயர் தமிழர்கள்

வடக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டத்துக்கு வலுசேர்க்கும் முகமாக புலம்பெயர் தமிழர்களால் ஆறு நாடுகளில் ஒரே நேரத்தில் மாபெரும் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் சர்வதேசத்தில் உள்ள ஆறு நாடுகளில் இன்றைய தினம் (12) குறித்த போராட்டம், 10 Downing street, London, SW1A 2AA எனும் இடத்தில் மாலை 2.00 – 7.00 மணிவரை இடம்பெறவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டமானது பிரித்தானியா கனடா , அமெரிக்கா, சுவிட்சர்லாந்து , பிரான்ஸ், ஜேர்மனி, போன்ற நாடுகளில் ஒரே நேரத்தில் இடம் பெற்றுள்ளது.

வடக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் நீதி வேண்டி, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால், நூறாவது நாளையும் தாண்டி ஒவ்வொரு மாவட்டத்திலும் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

ஆனால் இலங்கை அரசாங்கத்தால் இவர்களுக்கான நீதியான பதில் இதுவரை கிடைக்கவில்லை எனவே இவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பல்வேறு இடங்களிள் கவனயீர்ப்பு போராட்டங்களும் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றது.

தமிழர்களுடைய உரிமை போராட்டத்தினை சர்வதேசத்துக்கு தெரியப்படுத்த தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நாடுகடந்த தமிழீழ அரசின் ஏற்பாட்டில் போராட்டம் இடம்பெற்றுள்ளது.

இதேவேளை, ஆர்ப்பாட்டத்தில் பெரும் திரளான தமிழ் இன உணர்வாளர்கள் கலந்து கொண்டு போராட்டத்திற்கு வலுச்சேர்த்துள்ளனர்.

-tamilwin.com

TAGS: