உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நாடு என்றால் அது வடகொரியா தான்.
வடகொரியா தொடர்ந்து மேற்கொண்டு வரும் அணு ஆயுத சோதனைகளால் பல்வேறு நாடுகள் கலக்கத்தில் உள்ளன.
இந்நிலையில் மலேசியாவைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் Reuben Teo (31) கடந்த மாதம் வடகொரியா சென்றுள்ளார்.
அங்கு பல்வேறு பகுதிகளுக்கு சென்றதுடன் அழகான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
வடகொரியா சுற்றுலா செல்வதற்கு அருமையான இடம் என்றும், வடகொரியாவின் அழகான மறுபக்கம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
வடகொரியா குறித்து Reuben Teo கூறுகையில், கடந்த மாதம் நான் வட கொரியா சென்றேன், அங்கு உள்ள அழகான இடங்களை புகைப்படம் எடுத்தேன்.
நான் கூட வடகொரியா என்றவுடன் சற்று தயங்கினேன், ஆனால் அங்கு உள்ள இடங்கள் அனைத்தும் அவ்வளவு சுத்தமாக இருந்தன.
அங்கு பின்பற்றப்படும் பாரம்பரியங்கள் மிகவும் அற்புதமானவையாக இருந்தது, ஒரு விஷயத்தை கூற வேண்டுமென்றால் ஜப்பானுக்கு பின்னர் வடகொரியா ஒரு சுத்தமான நாடு என்று கூட கூறலாம்.
ஆனால் அங்கு இராணுவம் மற்றும் இராணுவம் தொடர்பான பகுதிகள் போன்றவைகள் புகைப்படங்கள் எடுப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. அங்கு சென்றவுடன் 31-வருடங்கள் பின் தங்கி 1980-ஆம் ஆண்டிற்கு சென்று விட்டேன் என்று கூறியுள்ளார்.
-lankasri.com