ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் எடுத்த முடிவு சரியானது. அவருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு இல்லை என வடமாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் தெரிவித்துள்ளார்.
வடக்கு முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரரேரணை தொடர்பில் அவரது நிலைப்பாடு குறித்து வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
வடமாகாண சபையில் முதலமைச்சர் உரையாற்றிய போது தமிழரசுக் கட்சி வெளிநடப்பு செய்தது. ஆனால் எமது கட்சி மற்றும் ஈபிஆர்எல்எப், ரெலோ ஆகிய கட்சிகள் வெளிநடப்பு செய்யவில்லை.
ஊழல் விசாரணை தொடர்பில் முதலமைச்சர் எடுத்த தீர்மானம் சரியானது. விசாரணைக்கு குழு போடப்பட்டு நான் சாட்சியமளித்த நிலையில் விசாரணை நடந்தது.
அத்துடன் எனது வேலை முடிந்து விட்டது. முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை என்பது அரசியல் பிரச்சினை.
எமது கட்சியாகிய புளொட் தான் முடிவெடுக்கும். அதற்கு தான் நான் கட்டுபடுவேன். இருப்பினும் புளொட் நம்பிக்கையில்லா பிரரேணைக்கு ஆதரவு தெரிவித்தால் நான் தனித்து முடிவெடுக்க வேண்டி வரும்.
மக்கள் வழங்கிய ஆணையின் படி ஊழல் தொடர்பில் முதலமைச்சர் எடுத்த முடிவு சரியானது. அதற்காக நமபிக்கையில்லா பிரரேரணை கொண்டு வந்தால் எப்படி ஆதரவு வழங்குவது.
நான் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை முன்வைத்திருந்த போது எனது கட்சி முதல் எதிர்த்தது. பின்னர் தான் புரிந்து கொண்டார்கள். தேவையேற்பட்டால் எனக்கு வாக்களித்த மக்களுக்காக தனித்தும் முடிவெடுக்க வேண்டி வரும் எனத் தெரிவித்தார்.
-tamilwin.com