தமிழக மீனவர்களின் 42 படகுகள் கடும் நிபந்தனைகளுடன் விடுவிப்பு: மஹிந்த அமரவீர

fishermen01தமிழக மீனவர்களை கடும் நிபந்தனைகளுடன் விடுவிக்க தயாரென அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீன்பிடி படகுகளில் 42 படகுகளை விடுவிக்க தயாரெனவும் அவற்றை ஏற்குமாறு இந்திய மத்திய அரசுக்கு அறிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,

இந்திய மீனவர்களின் படகுகள் விடுவிக்கப்பட்டாலும் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களை கைது செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதுடன், படகுகள் கைப்பற்றப்படும் என இலங்கை அரசு இந்திய அரசுக்கு திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

விடுவிக்கப்படும் படகுகள் மீண்டும் இலங்கை எல்லைக்கு வரக்கூடாது என பல நிபந்தைனைகளை இலங்கை அரசு முன்வைத்துள்ளது.

கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டின் பேரில் இலங்கை கடற்படையினரால் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இந்திய மீன்பிடிப்படகுகளை கைப்பற்றப்பட்ட ஒழுங்கில் கட்டம் கட்டமாக விடுவிக்க இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு தடுத்துவைக்கப்பட்டிருந்த 42 படகுகளை விடுவிக்க இரு நாட்டு அதிகாரிகளுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் அடிப்படையிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாக இலங்கை எல்லைக்குள் மீன் பிடியில் ஈடுப்பட்ட 140 மீன் பிடி படகுகள் நிபந்தனைகளுடன் படிப்படியாக விடுவிக்கப்படும்.

சுமார் 35 வருடங்களுக்கு மேல் நீடித்து வரும் இந்த பிரச்சினை தீர்வு காண ஆட்சிக்கு வரும் அரசாங்கம் முயற்சித்த போதும் அது பயணளிக்க வில்லை.

எனினும் இந்த அரசு இந்திய மீன்பிடிப் படகுகளை தடுத்து வைப்பதற்கு 2015 ஆம் ஆண்டு முதல் எடுத்த தீர்மானத்துக்கு இந்திய அரசாங்கம் சாதகமான சமிக்ஞையை வெளியிட்டுள்ளதாக அமைச்சர் அமரவீர குறிப்பிட்டுள்ளார்.

-tamilwin.com

TAGS: