பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்சில் அமைந்துள்ள ரயில் நிலையம் ஒன்றில் வெடிகுண்டு வெடித்ததாக வெளியான தகவலை அடுத்து அங்கு ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.
பிரஸ்ஸல்ஸ் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வெடித்தது போன்ற சத்தம் கேட்டதாக தகவல் வெளியானதை அடுத்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ரயில் நிலையத்தின் முக்கிய பகுதியில் இருந்து பொதுமக்களை அப்புறப்படுத்தியுள்ளனர்.
மட்டுமின்றி தகவல் வெளியானதை அடுத்து அப்பகுதில் ராணுவத்தை குவித்துள்ளனர்.
இதனிடையே வெடிகுண்டுடன் கூடிய பெல்ட் அணிந்த நபர் மீது ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியதாகவும் அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட வெடிகுண்டை செயலிழக்க செய்துள்ளதாகவும் தற்போது நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும் அரசு தரப்பு தகவல் வெளியிட்டுள்ளது.
ஆனால் இணையத்தில் வெளியான புகைப்படம் ஒன்றில் குறித்த ரயில் நிலையத்தில் தீப்பிழம்புடன் வெடித்துச் சிதறுவது போன்ற காட்சி ஒன்று வைரலாகியுள்ளது.
கடந்த 2016 மார்ச் மாதம் பிரஸ்ஸல்ஸ் விமான நிலையத்தில் ஐ.எஸ் தீவிரவாதைகள் மேற்கொண்ட கொடூர தாக்குதலில் 32 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர்.
-lankasri.com