காணாமல் போனோருக்கான பணியகம் மிகவும் அவசியமானது என்று சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதுவர் அதுல் கெசாப் தெரிவித்துள்ளார். சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதுவர் அதுல் கெசாப் நேற்று கிழக்கு மாகாணத்துக்குப் பயணம் மேற்கொண்டிருந்தார்.
இதன் போது, பல்வேறு தரப்பினரையும் அவர் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தார்.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களையும் அமெரிக்கத் தூதுவர் சந்தித்துள்ளார்.
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக அவர்களின் அன்புக்குரிய தாய்மார் பதிலைத் தேடுவதாகவும், அதற்கு காணாமல் போனோருக்கான பணியகம் மிகவும் அவசியமானது என்றும் அமெரிக்க தூதுவர் கருத்து வெளியிட்டுள்ளார்.
-puthinappalakai.net