பாடசாலை மாணவர்களை பணயக் கைதிகளாக பிடித்த ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள்

filipino rebalsஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் பிலிப்பைன்ஸ் நாட்டின் தென் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றுக்குள் புகுந்து பாடசாலை மாணவர்களை பணயக் கைதிகளாக பிடித்துள்ளனர்.

பாடசாலை இன்று ஆரம்பித்த நேரத்தில் ஆயுதங்களுடன் அங்கு சென்ற சுமார் 300 பயங்கரவாதிகள், மாணவர்களை பணயக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளதாக பிலிப்பைன்ஸ் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

பயங்கரவாதிகளின் பிடியில் எத்தனை பிள்ளைகள் சிக்கியுள்ளனர் என்பது இன்னும் தெரியவரவில்லை. மாணவர்களை பயங்கரவாதிகளின் பிடியில் இருந்து மீட்க பொலிசார் விசேட நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.

அதேவேளை பிலிப்பைன்ஸின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பிராந்தியத்தில் அரச படையினருக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கு இடையில் கடந்த 5 வாரங்களாக மோதல் நீடித்து வருகிறது.

இந்த நிலையிலேயே, மின்டானாவோ தீவில், வடக்கு கட்டபட்டோ மாகாணத்தின் பிக்கவயான் நகரில் உள்ள பாடசாலையில், பயங்கரவாதிகள் மணவர்களை பணயக் கைதிகளாக பிடித்துள்ளனர்.

-lankasri.com