இசைத்துறையில் புதுப் புரட்சியை ஏற்படுத்திய மைக்கல் ஜாக்சன் 2009 யூன் 25ஆம் ஆண்டு மரணமடைந்தார். ஆனாலும் இன்றுவரை பல்வேறுபட்ட முரண்பாடுகளும், சர்ச்சைகளும் இவரது மரணத்தில் உள்ளதாக கூறப்படுகின்றது.
இவர் மீது பல்வேறு விதமான விமர்சனங்களும், குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டு இருந்தாலும் அவை போலியானவை என நிரூபிக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
மேலும், அவருடைய மரணம் மாரடைப்பில் ஏற்பட்டதாக பதியப்பட்டுள்ளது. என்றாலும், அது ஓர் திட்டமிடப்பட்ட கொலை என்ற வகையிலும் வழக்கு பதியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதுதொடர்பில் விசாரணைகள் நடைபெற்று வந்தாலும் வெளிப்படையான தகவல்கள் மறைக்கப்பட்டே வந்தன.
இதன் காரணமாக மைக்கல் ஜாக்சனின் மரணத்தில் உயர்மட்ட அதிகாரங்கள் இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
தகுந்த ஆதாரங்கள் இல்லாத காரணத்தினால் அவருடைய மரணம் இயற்கை மரணமாகவே கூறப்பட்டு வந்தது. ஜாக்சனின் குடும்பத்தார் அது ஓர் கொலை என வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அண்மையில் மைக்கல் ஜாக்சனின் மகளான பாரிஸ் (paris) தனது தந்தை திட்டமிட்டு கொலை செய்யப்பட்டதற்கான ஆதாரம் ஒன்றினை முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆதாரமானது மைக்கல் ஜாக்சன் இறப்பதற்கு முதல் நாள் தனது முகாமையாளரான டைட்டெர் வைஸ்னர் (Dieter Weisner) உடன் தொலைபேசியில் உரையாடிய குரல் பதிவாகும்.
அதில் மைக்கல் தெரிவித்துள்ளதாவது,
”நான் இதை உங்களிடம் சொல்லியாக வேண்டும். நான் இங்கு இருப்பதை விரும்பாத ஒரு குழுவினர் உள்ளனர். இதனை தொலைபேசியில் உரையாடுவது நல்லதல்ல.
எனக்கு என்ன நடக்க போகிறது என தெரியாது. ஏதோ நடக்கப் போகிறது என உணர்கிறேன். அதை கடவுள் மட்டுமே அறிவார்.
அவர்கள் என்னை சுடலாம், குத்தலாம், கொலை செய்யலாம். நான் அதிகமாக போதைப்பொருள் பாவனை செய்வதாக அவர்கள் என்மீது பழி போடலாம் இவ்வாறு அவர்களால் நிறைய விடயங்களை செய்ய முடியும்.
அவர்கள் அரசாங்கம் இல்லை அதை விடவும் மேலானவர்கள். எனக்கு தெரியாது டைட்டர், எனக்கு அதனைப்பற்றி கவலையெதுவும் இல்லை. அவர்களால் என்னை எடுத்துக்கொள்ள முடியும்.
எனக்கு என்னுடைய வாழ்க்கை குறித்து எதுவித கவலையும் இல்லை. எனக்கு என்னுடைய குழந்தைகள் நலமாக இருக்க வேண்டும். அத்துடன் பாதுகாப்பாயிருக்க வேண்டும்.
இவை மைக்கல் ஜாக்சன் தொலைபேசியில் கடைசியாக பேசிய வார்த்தைகளாகும். இந்த ஆதாரத்தினை முன்வைத்துள்ள அவரது மகள் தனது தந்தை கொல்லப்பட்டு உள்ளார், அவர் மாரடைப்பில் இறக்கவில்லை எனவும் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனவே மைக்கல் ஜாக்சன் தான் கொல்லப்பட இருப்பதை முதல் நாளே அறிந்து வைத்து உள்ளார். எனவும் இது குறித்து எதுவும் செய்ய முடியாத நிலையில் முகாமையாளருக்கு அறியப்படுத்தியுள்ளார்.
மேலும், 8 வருடங்கள் கடந்துள்ள நிலையில், தற்போது கொடுக்கப்பட்ட இந்த ஆதாரத்தின் காரணமாக வழக்கு விசாரணைகள் மாறுபட்ட கோணத்தில் நகரலாம் எனவும் கூறப்படுகின்றது.
எனினும் இந்த வழக்கில் உயர் மட்ட அதிகாரங்கள் இருப்பதன் காரணமாக இந்த ஆதாரம் மூடிமறைக்கப்படலாம் எனவும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை மைக்கல் ஜாக்சனின் குடும்ப வைத்தியரான கான்ராட் முர்ரே (Conrad Murray) 2011ஆம் ஆண்டு தற்செயல் கொலை வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
-tamilwin.com