ரசாயன தாக்குதல்: அமெரிக்கா மீது ரஷ்யா குற்றச்சாட்டு

syria_chemical1சிரியா ஜனாதிபதி பஷார் அல் அசாத் மீது பழிசுமத்த அமெரிக்கா முயல்கிறது என ரஷ்யா தெரிவித்துள்ளது.

இதனை ரஷ்யா வெளிவிவகாரத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஸகரோவா தெரிவித்துள்ளார்.

நேற்று மாஸ்கோவில் செய்தியாளர்களை சந்தித்த மரியா, சிரியாவின் கான் ஷேகுன் பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் சிரிய ராணுவம் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்கா குற்றம் சாட்டியது.

ஆனால் கிளர்ச்சியாளர்களின் ஆயுதக் கிடங்கு மேல் தான் தாக்குதல் நடத்தப்பட்டது.

அவர்கள் பதுக்கியிருந்த ரசாயனங்கள் தான் வெடித்து சிதறின, சிரியாவிடம் எந்தவித ரசாயன ஆயுதங்களும் இல்லை என ஐ.நா பாதுகாப்பு குழுவே தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

இந்நிலையில் கிளர்ச்சியாளர்கள் ரசாயன தாக்குதல் நடப்பது போன்ற போலியான காட்சிகளை உருவாக்கி வருவதாக உறுதியான தகவல்கள் கிடைத்துள்ளன.

அமெரிக்கா சிரியா மீது தாக்குதல் நடத்துவதற்காக இதையெல்லாம் செய்கிறது, ஜனாதிபதி அசாத் மீது பழிசுமத்த முயல்கிறது என தெரிவித்துள்ளார்.

-lankasri.com