இனி பொறுமை காக்க முடியாது: வடகொரியா குறித்து டிரம்ப்

norrthவட கொரியா விவகாரத்தில் இனியும் பொறுமையாக இருக்கப் போவதில்லை என அமெரிக்கா ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தென்கொரியா ஜனாதிபதி மூன் ஜே இன் அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் அந்நாட்டின் ஜனாதிபதி டிரம்பை சந்தித்து பேசினார்.

பின்னர் டிரம்பும், மூன் ஜேவும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது டிரம்ப் கூறுகையில், வடகொரியாவின் பொறுப்பற்ற, கொடூர செயல்பாடுகளால் அமெரிக்காவும், தென் கொரியாவும் பாதிக்கப்படுவதாக குறிப்பிட்டார்.

சொந்த நாட்டு மக்கள் நலன் பற்றி கவலைப்படாத வட கொரியா மனித உயிர்களுக்கு மதிப்பளிப்பதில்லை என்றும் டிரம்ப் குற்றம்சாட்டினார்.

மேலும், வட கொரியா விடயத்தில் அமெரிக்கா தன்னுடைய பொறுமையை இழந்து விட்டதாக கூறிய டிரம்ப் இனி பொறுமையை கடைபிடிக்க போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

-lankasri.com