வடகொரியா மீண்டும் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை ஒன்றை நடத்தியிருப்பதாக சரவ்தேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த ஏவுகணை சோதனை அந்நாட்டின் மேற்குப் பிராந்தியத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜப்பான் மற்றும் தென்கொரிய அதிகாரிகளை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், ஜப்பான் கடலில் உள்ள சிறப்பு பொருளாதார மண்டலத்தில் அந்த ஏவுகணை விழுந்திருக்கலாம் என ஜப்பான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த ஏவுகணையானது, சுமார் 40 நிமிடங்களுக்கு 930 கி.மீ பறந்து கடலில் விழுந்ததாக கூறப்படுகின்றது. அத்துடன், வடகொரியாவினால், இந்த ஆண்டில் நடத்தப்பட்ட 11வது ஏவுகணை சோதனை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சமீப காலமாக, வடகொரியா ஏவுகணை மற்றும் அணு ஆயுத சோதனைகளை அதிகரித்திருப்பதால் கொரிய பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
-tamilwin.com