பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு வரும் 2040 ஆம் ஆண்டிற்குள் தடை விதிக்கப்படும் என்று பிரான்ஸ் அரசு அறிவித்துள்ளது.
பிரான்சில் பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களுக்கு தடை விதிக்க அரசு திட்டமிடப்பட்டுள்ளது.
பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களிலிருந்து வெளியேறும் புகைகள் சுற்றுச்சுழலுக்கு மட்டுமின்றி, மனிதர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துவதால், பிரான்ஸ் அரசு இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து பிரான்ஸ் நாட்டு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் நிக்கோலஸ் ஹூலட் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், பாரீஸ் ஒப்பந்தத்தின்படி 2040 ஆம் ஆண்டிற்குள் பிரான்ஸில் பெட்ரோல் டீசல் வாகனங்கள் விற்பனை முடிவுக்கு கொண்டு வரப்படும் எனவும் இந்த முடிவு கடினமான முடிவு தான், குறிப்பாக கூறவேண்டுமென்றால் வாகன உற்பத்தியாளர்களுக்கு, கஷ்டமான ஒன்றாக இருக்கும்.
இருந்த போதிலும் இத்திட்டத்தை செயல்படுத்தியே தீருவோம். வாகனங்களுக்காக பார்த்தால் மக்கள் வாழ முடியாது. இதனால் இந்த திட்டம் கண்டிப்பாக நடைமுறை படுத்தப்படும் என்று திட்டவட்டமாக கூறியுள்ளார்.
-lankasri.com