ஐ.எஸ் தலைவர் பாக்தாதி கொல்லப்பட்டதை சிரிய போரைக் கண்காணித்து வரும் மனித உரிமைகள் அமைப்பும் உறுதி செய்துள்ள நிலையில் அதன் தலைவர் விரைவில் அறிவிக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐஎஸ் பயங்கரவாதிகளின் பிடியில் இருந்த மொசூல் நகரை அமெரிக்க ஆதரவுடன் போரில் ஈடுபட்டுள்ள ஈராக் படைகள் முழுமையாக மீட்டதாக ஈராக் பிரதமர் ஹைதர் அல் அபாதி திங்கள்கிழமை அறிவித்தார்.
ஐஎஸ் அமைப்பின் தலைமையகம் போல் செயல்பட்ட மொசூல் நகரை 9 மாத கடும் போருக்குப் பின்னர் ஈராக் அரசுப் படைகள் கைப்பற்றின.
அந்த தாக்குதலின் போது பாக்தாதி கொல்லப்பட்டிருக்கலாம் என்று தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், ஐஎஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் இருக்கும் டல் அஃபார் நகரில் இருந்து ஐ.எஸ் அமைப்பு சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், புதிய தலைவர் விரைவில் அறிவிக்கப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-lankasri.com