தீவிரவாதிகளிடம் இருந்து மீட்டாலும்..நகரம் முழுவதும் கேட்கும் குழந்தைகளின் அழுகுரல்

mosulஇஸ்லாமிய அரசு என்று அழைத்துக் கொள்ளும் ஐ.எஸ் தீவிரவாதிகளிடமிருந்து, ஈராக்கின் மொசூல் நகரை ஈராக் இராணுவம் கைப்பற்றிவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் அங்கு 3000-பேர் சிக்கியிருப்பதாக ஐ.நா. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சிக்கியிருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் தான் என்றும், அவர்கள் தம் குடும்பங்களை பிரிந்து அந்த பகுதியில் இருப்பதால், பெற்றோர்களை இழந்து தவிக்கும் மழலைகளில் குரல் அங்கு எதிரொலிப்பதாக கூறப்படுகிறது.

ஐஎஸ் அமைப்பினருக்கும் ஈராக் இராணுவத்திற்கு இடையில் இன்னமும் நகரின் சில இடங்களில் மோதல்கள் தொடர்கின்றன.

நகரில் இருந்து பாதுகாப்பு தேடிச்செல்பவர்களின் எண்ணிக்கையும் நீடித்தபடி இருக்கிறது.

இது குறித்து அமெரிக்க தளபதி டவுன்செண்ட், இந்த வெற்றி மட்டும் ஐஎஸ் தீவிரவாத அமைப்பை நீக்கிவிடாது. கடுமையான போர் காத்திருக்கிறது என்று எச்சரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-lankasri.com