ஜேர்மனியில் புகலிடம் கோரி வரும் வெளிநாட்டினர்களின் எண்ணிக்கையை ஒரு வரையறைக்குள் கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை அந்நாட்டு சான்சலரான ஏஞ்சலா மெர்க்கல் நிராகரித்துள்ளார்.
ஐரோப்பிய நாடுகளை ஒப்பிடுகையில் ஜேர்மனியில் மட்டுமே அதிகளவில் புலம்பெயர்ந்தவர்கள் புகலிடம் தேடி செல்கின்றனர்.
கடந்த 2016-ம் ஆண்டில் மட்டும் சுமார் 10 லட்சம் புலம்பெயர்ந்தவர்கள் ஜேர்மனிக்கு சென்றுள்ளனர்.
இது தொடர்பாக தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சான்சலரான ஏஞ்சலா மெர்க்கல் இந்த கோரிக்கையை நிராகரித்துள்ளார்.
‘பல்வேறு அச்சுறுத்தலால் தாய்நாட்டை விட்டு புகலிடம் கோரி வருபவர்கள் மீது இதுபோன்ற வரையறை கொண்டு வர முடியாது.
ஆனால், புகலிடம் அளிக்க தேவையான தகுதிகள் இல்லாமல் இருந்தால் மட்டுமே புலம்பெயர்ந்தவர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள்.
புகலிடம் அளிப்பது தொடர்பான இந்த கொள்கையில் நான் உறுதியாக இருக்கிறேன்’ என ஏஞ்சலா மெர்க்கல் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
எனினும், புகலிடம் கோரி வருபவர்களின் எண்ணிக்கையை வரையறைக்குள் வைக்காவிட்டால் தேர்தலில் ஆளும் கட்சியுடன் கூட்டணி அமைக்க மாட்டோம் என Christian Social Union (CSU) கட்சி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-tamilwin.com