ராணுவத்தினர் பிடியில் ஐ.எஸ் ஆதரவு ஜேர்மனிய இளம்பெண்

ஐ.எஸ் ஆதிக்கத்தில் இருந்த மொசூல் நகரத்தில் இருந்து மீட்கப்பட்ட இளம்பெண் ஜேர்மனியராக இருக்கலாம் என நம்பப்படுகிறது.

ஈராக்கின் மொசூல் நகரத்தை அமெரிக்க கூட்டுப்படைகளுடன் இணைந்து ஈராக்கிய ராணுவம் சில தினங்களுக்கு முன்னர் கைப்பற்றியது.

தற்போது மொசூல் நகரை சல்லடையிட்டு தேடிவரும் ஈராக்கிய ராணுவத்தினரின் பிடியில், அங்கு தலைமறைவாக இருந்து வந்த சில ஐ.எஸ் ஆதரவு பெண்கள் பிடிபட்டுள்ளனர்.

அதில் ஒரு ஜேர்மானியரான இளம்பெண் லிண்டா வின்ஸெல்(16) என தெரிய வந்துள்ளது. ஜேர்மனியின் Pulsnitz பகுதியைச் சேர்ந்த லிண்டா Frankfurt வழியாக துருக்கி சென்று அங்கிருந்து ஐ.எஸ் ஆதரவாளர்களுடன் இணந்துள்ளார்.

பின்னர் மரியம் என பெயர் மாற்றிக் கொண்ட லிண்டா, தனது புகைப்படங்களையும் அவ்வப்போது சமூக வலைதளங்களில் பதிவேற்றி வந்துள்ளார். லிண்டா தலைமறைவான விவகாரம் அரசுக்கு கிட்டியதும் ஜேர்மனியின் தீவிரவாதிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டார்.

லிண்டா மீட்கப்பட்ட மொசூல் பகுதியில் இருந்து 20க்கும் மேற்பட்ட இளம்பெண்களை ஈராக்கிய படை மீட்டுள்ளது.

இதில் சில பெண்கள் தற்கொலை வெடிகுண்டை கட்டிக் கொண்டும் சிலர் தானியங்கி துப்பாக்கிகளுடனும் பிடிபட்டுள்ளனர்.

இதனிடையே லிண்டா பிடிபட்டுள்ளது உறுதி செய்த பின்னர் அவர் மீதான விசாரணை மீண்டும் துவக்கப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-lankasri.com