ஐ.எஸ். தீவிரவாதிகளை முற்றிலும் ஒழிப்பது இயலாது என்று பிலிப்பைன்ஸ் நாட்டு அதிபர் ரோட்ரிகோ துத்தெர்டி தெரிவித்துள்ளார்.
ஐ.எஸ். தீவிரவாதிகள் பிலிப்பைன்சின் மாராவி நகரை மையமாகக் கொண்டு தாக்குதல் சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் அந்நாட்டு அதிபர் Rodrigo Duterte அமலில் இருக்கும் இராணுவ சட்டம் மேலும் நீட்டிப்பில் இருக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் அனுமதி வழங்குமாறு கேட்டுள்ளார்.
இச்சட்டம் வரும் 20ஆம் திகதியுடன் முடிவடைகிறது என்பதால் தீவிரவாதிகளை அதற்குள் முற்றிலும் ஒழிப்பது இயலாது.
இராணுவ சட்டத்தை டிசம்பர் 31-ஆம் திகதி வரை நீட்டிக்க அனுமதிக்குமாறு அதிபர் கேட்டுக்கொண்டுள்ளார்.
புரட்சியாளர்களாலோ, படையெடுப்பினாலோ பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும்போது அமல் செய்யப்படும் இந்த சட்டம் 60 நாட்களுக்கு மட்டுமே அமலில் இருக்க வேண்டும் என்பதால், தற்போது நாடாளுமன்றத்தின் அனுமதியுடன் இராணுவ சட்டத்தை நீட்டிக்க அதிபர் அனுமதி கோரியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-lankasri.com