கொய்யாப்பழத்தில் புரதச்சத்து, கொழுப்புச்சத்து, நார்ச்சத்து, மாவுச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, விட்டமின் A, B, C போன்ற சத்துக்கள் ஏராளமாக நிறைந்துள்ளது.
இவ்வளவு சத்துக்கள் நிறைந்த கொய்யா பழத்தை தினமும் 2 சாப்பிட்டு வந்தால், நிறைய மருத்துவ நன்மைகளை பெறலாம்.
கொய்யா பழத்தின் நன்மைகள்?
- கொய்யா நம் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது. எனவே இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம்.
- தினமும் 2 கொய்யா பழங்கள் சாப்பிட்டு வந்தால், அது நம் உடலின் தேவையில்லாத கொழுப்பைக் குறைத்து, உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.
- சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கவும், தைராய்டு பிரச்னையைத் தடுக்கவும் கொய்யா பழம் சிறந்த மருந்தாக பயன்படுகிறது.
- விட்டமின் C சத்துக்களை, கொய்யா பழம் அதிகமாக கொண்டுள்ளதால், விட்டமின் C மாத்திரைகளை எடுத்துக் கொள்பவர்கள், இந்த கொய்யா பழத்தினை சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.
- கொய்யா பழத்தில் உள்ள விட்டமின் A, சளித்தொல்லை மற்றும் குடல் தொடர்புடைய குறைகளை சரிசெய்து, பார்வைத் திறனை மேம்படுத்த உதவுகிறது.
- கொய்யா பழம் சாப்பிடுவதால், அது ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்து, பாக்டீரியா தொற்றிலிருந்து நம்மை பாதுகாக்கிறது.
- கொய்யா பழத்தில் உள்ள Lycopene எனும் சத்துக்கள் நம் உடலின் திசுக்களைத் தாக்கும் புற்றுநோய்க்கு எதிராக செயல்பட்டு, புற்றுநோய் வராமல் தடுக்கிறது.
குறிப்பு
கொய்யாப்பழத்தை சாப்பிடும் போது, வெட்டிச் சாப்பிடுவதை விட கடித்துச் சாப்பிடுவதால், அதனுடைய முழுமையான பலனை பெறலாம்.
-lankasri.com